இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ‘இந்த’ பொருளை சாப்பிடுங்க!

இதயத்தை பாதுகாப்பது முதல், இன்னும் பற்பல நண்மைகளை கொடுக்கிறது, கருப்பு எள்.   

Written by - Yuvashree | Last Updated : Jan 7, 2024, 03:54 PM IST
  • இதயத்தை பாதுகாக்கும் உணவு.
  • தோல் பராமரிப்புக்கும் உதவும்.
  • அது என்ன உணவு தெரியுமா?
இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ‘இந்த’ பொருளை சாப்பிடுங்க! title=

இதயத்தை பாதுகாக்க, நாம் அனைவரும் பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, பல ஹெல்தியான உணவுகளை சாப்பிட வேண்டியுள்ளது. அப்படி, கண்டிப்பாக நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு பொருட்களுள் ஒன்று, கருப்பு எள் விதைகள். சிறிய வடிவில் இருக்கும் ஒரு ஹெல்தியான உணவு பொருளாகும். இதில், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள், ஃபைபர் சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். 

இதயத்திற்கு நல்லது..

கருப்பு எள் சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த அழுத்த பாதிப்புகள் குறைந்து, கொழுப்பையும் குறைக்கலாம். 

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

கறுப்பு எள்ளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது, கருப்பு எள் சாப்பிடுவதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும்.  குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகள் பல தெரிவித்துள்ளன. 

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்:

கருப்பு எள் விதைகளில் மெக்னீசியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. மேலும், இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இதில் இருக்கும் சத்துக்கள் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. 

எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது:

கருப்பு விதைகளில் கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளது, இது வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க முக்கியமானது, இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தடுக்க உதவுகிறது.

மேலும் படிக்க | Joe OTT Release: ‘ஜோ’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

வயதான தோற்றத்தை தடுக்கிறது:

கருப்பு எள்ளில் உள்ள சக்திவாய்ந்த பண்புகள், சரும நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது. மேலும், இவை வயதான தோற்றத்தை அளிக்கும் செல்கள் வளர விடாமல் தடுக்க, கருப்பு எள் உதவுகிறது. 

Black seeds

சரும பராமரிப்பு:

கருப்பு எள்ளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை சருமத்தை நன்றாக பராமரிக்க உதவுகின்றன. இது, ஆரோக்கியமான தோலை பராமரித்து சுருக்கங்கள் மற்றும் வறட்சி போன்ற வயதான அறிகுறிகள் வராமல் தடுக்கின்றன. 

ஹார்மோன் சமநிலை:

கருப்பு எள்ளில் காணப்படும் லிக்னான்கள், ஹார்மோன் அளவை சமப்படுத்த உதவுகின்றன, குறிப்பாக அதில் ஈஸ்ட்ரோஜன் பண்புகள் உள்ளன. இது மாதவிடாய் நிற்கும் காலத்தில் அவர்களின் ஹார்மோன் மாற்றத்தை கட்டுப்படுத்த உதவும். மேலும், இவை ஒட்டுமொத்த ஹார்மோன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

கல்லீரலுக்கு நல்லது:

நச்சுத்தன்மையை நீக்குவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் கருப்பு எள் விதைகளில் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் கலவைகள் உள்ளன, இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு:

கருப்பு எள்ளில் செசாமோலின் என்ற பண்பு உள்ளது. இந்த பண்பு அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்குகிறது, இது நாள்பட்ட அழற்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல் நலக்கோளாறுகளை  குறைக்க உதவுகிறது.
சத்து நிறைந்தது:

கருப்பு எள் விதைகளில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஈ, பி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை சீரான உணவின் ஒரு பகுதியாக உட்கொள்ளும்போது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. 

மேலும் படிக்க | 95 நாட்கள் பிக்பாஸில் தாக்குப்பிடித்த விசித்ரா! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News