வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு கோட் மற்றும் வெள்ளை சட்டை அணிகிறார்கள்? இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
திரைப்படங்களில் வரும் நீதிமன்ற காட்சிகள் ஆனாலும், உண்மையான நீதிமன்றம் ஆனாலும், எப்போதும் வக்கீல்கள் நீதிபதிகள் எப்போதும் கருப்பு கோட்டுகள் மற்றும் வெள்ளை சட்டைகளில் தான் வழக்கறிஞர்களைப் பார்க்க முடியும். ஆனால் வக்கீல்கள் ஏன் கருப்பு தவிர வேறு கோட் அணியவில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வக்கீல்கள் அணியும் கருப்பு கோட் பேஷனுக்காக அணிவது அல்ல. அதன் பின்னால் ஒரு வரலாற்று காரணம் இருக்கிறது.
1327 ஆம் ஆண்டில் எட்வர்ட் III என்பவர் வக்கீல் தொழிலை தொடக்கினார். அந்த நேரத்தில் ஆடைகளின் குறியீட்டின் அடிப்படையில் நீதிபதிகளின் உடைகள் தயாரிக்கப்பட்டன. நீதிபதி தலையில் விக் அணிந்திருந்தார். வக்கீலின் ஆரம்ப காலகட்டத்தில், வழக்கறிஞர்கள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டனர் - அவை மாணவர் (Student), வழக்கறிஞர் (Pleader), பெஞ்சர் மற்றும் பாரிஸ்டர்.
ஆரம்ப காலங்களில், நீதிமன்றத்தில் தங்க சிவப்பு ஆடைகள் மற்றும் பழுப்பு நிற ஆடைகளை அணிந்தனர். அதன்பிறகு, 1637 ஆம் ஆண்டில், வழக்கறிஞர்களின் உடையை மாற்றி, பொது மக்களிடம் இருந்து வித்தியாசமாக தோன்றுவதற்காக வழக்கறிஞர்கள் நீண்ட ஆடைகளை அணியத் தொடங்கினர். இந்த ஆடை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை மற்ற நபர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது என்று நம்பப்படுகிறது.
ALSO READ | ஆபரேஷன் செய்யும் போது மருத்துவர்கள் ஏன் நீலம் அல்லது பச்சை நிற ஆடையை அணிகிறார்கள்..!!!
பிரிட்டனின் ராணி மேரி 1694 இல் பெரியம்மை நோயால் இறந்தார், அதன்பிறகு அவரது கணவர் கிங் வில்லியம்ஸ் அனைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களையும் துக்கம் அனுசரிக்க கருப்பு கவுன்களில் கூடுமாறு கட்டளையிட்டார். இந்த உத்தரவு பின்னர் ரத்து செய்யப்படவில்லை. இதுவே வழக்கறிஞர்கள் கருப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என்ற நடைமுறைக்கு வழிவகுத்தது.
இருப்பினும், இன்றைய காலத்தில், கருப்பு கோட் வழக்கறிஞர்களின் அடையாளமாக மாறியுள்ளது. 1961 ஆம் ஆண்டில், நீதிமன்றங்களில் வெள்ளை பேண்ட் டை கொண்ட கருப்பு கோட் அணிய வேண்டும் என்பதை சட்டமாக்கியது. இந்த கருப்பு கோட் மற்றும் வெள்ளை சட்டை வழக்கறிஞர்களுக்கு ஒழுக்கத்தை தருகிறது என்றும், அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.
ALSO READ | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR