அடேங்கப்பா! கொல்லையில் இருக்கும் கற்பூரவள்ளியில் இத்தனை நன்மைகளா?

ஆப்பிளை விட 42 மடங்கு அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட கற்பூரவள்ளி, இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 10, 2022, 04:02 PM IST
  • இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும் கற்பூரவள்ளி
  • ஆப்பிளை விட 42 மடங்கு அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட கற்பூரவள்ளி
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் கற்பூரவள்ளி

Trending Photos

அடேங்கப்பா! கொல்லையில் இருக்கும் கற்பூரவள்ளியில் இத்தனை நன்மைகளா? title=

பன்னெடுங்காலமாக கற்பூரவள்ளியை நாம் பயன்படுத்தி வருகிறோம். வாயு பிரச்சனை, தலைவலி, வயிற்றுவலி போன்ற பல உடல் பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இருக்கும் கற்பூர வள்ளி இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதை அமிர்தம் என்றே சொல்ல வைக்கும்.

கற்பூரவள்ளி இந்திய சமையலறையில் காணப்படும் ஒரு அத்தியாவசிய மசாலா. உணவின் சுவையை அதிகரிக்கும் கற்பூரவள்ளி செரிமான அமைப்பு தொடர்பான பல பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது. 

கற்பூரவள்ளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பல சத்துக்கள் ஒன்றிணைந்து இருக்கும் கற்பூரவள்ளியில் வைட்டமின்  A, K மற்றும் C அதிகமாக இருக்கிறது. எனவே கற்பூரவள்ளி செரிமான பிரச்சனைகளை குறைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும்.

மேலும் படிக்க | எந்த பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?

வாய் துர்நாற்றத்தை குறைக்கும் கற்பூரவள்ளி
வாயில் ஏற்படும் துர்நாற்றம் போன்ற பிரச்சனையையும் கற்பூரவள்ளி குறைக்கிறது என்பது ஆச்சயமானது.

தினமும் இரண்டு அல்லது நான்கு கற்பூரவள்ளி இலைகளை சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் குறைவதுடன், வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறைத்து, ஈறுகள் வலுவடையும்.

சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது
சளி, இருமல், மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை புண்ணை சரி செய்ய கற்பூரவள்ளி பயன்படுகிறது.

ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது. உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

உணவுகளின் சுவையை கூட்டவும் உதவும் கற்பூரவள்ளியை ஏடிஸ் கொசுக்களை விரட்டுவதற்காக வீடுகளில் வளர்க்கலாம்.  

மேலும் படிக்க | பொடுகுத் தொல்லையா? இயற்கையான தீர்வு இஞ்சி 

கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் எண்ணிக்கை குறையும்.

ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக சத்து மிகுந்தது என்று அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதற்கு காரணம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை இதில் அதிக அளவில் உள்ளன.

கற்பூரவள்ளி இலைகளில் ஏராளமான நார்ச்சத்து உள்ளதால், இந்த இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் படிக்க | உடலின் தோஷங்களை அதிகரிக்கும் உணவுகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News