குளிர் காலத்தில் சர்க்கரை அளவு தாறுமாறாக ஏறுதா? பச்சைப் பட்டாணி தான் கரெக்ட்..!

Green Beans | குளிர் காலத்தில் ரத்தத்தில் தாறுமாறாக ஏறும் சர்க்கரை அளவை பச்சைப் பட்டாணி மூலம் கட்டுப்படுத்துவது எப்படி? அதில் இருக்கும் சத்துக்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 1, 2024, 07:18 PM IST
  • பச்சைப் பட்டாணி நன்மைகள்
  • ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்
  • எடை இழப்புக்கு உதவும் பட்டாணி
குளிர் காலத்தில் சர்க்கரை அளவு தாறுமாறாக ஏறுதா? பச்சைப் பட்டாணி தான் கரெக்ட்..! title=

Green Beans Health Tips Tamil | குளிர் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறுவதை பச்சை பட்டாணி சாப்பிட்டு கட்டுப்படுத்தலாம். இப்போதெல்லாம் சர்க்கரை நோய் வீட்டில் ஒருவருக்கு வந்துவிடுகிறது. அதிலும் 30 வயதை எட்டிய இளைஞர்களுக்கே சர்க்கை நோய் பிரச்சனை இருப்பது இயல்பாகிவிட்டது. இதற்கு காரணம் மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ ஆய்வுகள் பலவற்றிலும் சர்க்கரை நோய்க்கான காரண் இதுதான் என்பது துல்லியமாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும் வாழ்க்கை முறை மோசமாக இருப்பதே காரணம் என்பதை மட்டும் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. ஒருமுறை நீரிழிவு நோய் வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அதனோடு நீங்கள் கட்டாயம் போராடியே ஆக வேண்டும். 

சர்க்கரை நோய் பின்விளைவுகள்

இருப்பினும் சரியான உணவு பழக்க வழக்கம், நல்ல வாழ்க்கை முறை ஆகிய காரணங்களின் மூலம் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இதில் கவனம் செலுத்தாதபோது தான் உடலில் நீர் கோர்ப்பது முதல் கிட்னி செயலிழப்பு வரை பல மோசமான உடல் பாதிப்புகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சூழலில் ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை பச்சை பட்டாணி சாப்பிட்டு எப்படி கட்டுப்படுத்துவது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

பச்சை பட்டாணி நன்மைகள்

பச்சை பட்டாணி ஒரு சிறந்த உணவாகும், இது சுவையானது மட்டுமல்ல, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. மேலும், இந்த பச்சை பட்டாணி பல நோய்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கிறது. பட்டாணியில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) உள்ளது. இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. பட்டாணியில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் ஆகியவை அச்சின் இரத்த சர்க்கரையில் ஏற்ற இறக்கங்களைத் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | Fox Nuts: மூட்டு வலி முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் மக்கானா தாமரை விதை

செரிமானத்தை மேம்படுத்தும்

பச்சை பட்டாணியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனுடன், நார்ச்சத்து, வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கிறது, இது பசியைக் குறைக்கிறது. அதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்வதை தடுக்கிறது.

தசை வளர்ச்சிக்கு உதவி

பச்சை பட்டாணியில் நல்ல அளவு புரதம் உள்ளது. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. மேலும், தசைகளை சரிசெய்ய உதவுகிறது. ஒருவேளை நீங்கள் தினமும் ஜிம்மிற்குச் சென்றால், உங்கள் உணவில் பட்டாணியை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக சூப்பர் ரிசலட் கிடைக்கும்.

கண்களுக்கு நன்மை பயக்கும்

பட்டாணி கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அரை கப் பச்சைப் பட்டாணியில் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் ஏ அளவுகளில் 47% உள்ளது, இது கண்பார்வையைப் பராமரிப்பதற்கும் மாகுலர் சிதைவைத் தடுப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.

எடை இழப்புக்கு உதவும்

பச்சை பட்டாணியை உட்கொள்வதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. வயிற்றை விரைவாக நிரப்ப உதவுகிறது, இதனால் அதிகப்படியான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள் மீது உங்கள் நாட்டம் செல்வதை தடுக்கிறது. இதனால், எடை அதிகமாவதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

பட்டாணியை எப்படி சாப்பிடலாம்?

பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் எளிது. பச்சை பட்டாணியை வேகவைத்து, சூப்பில் சேர்த்து, சாலட் வடிவில் அல்லது காய்கறிகளுடன் கலந்து சாப்பிடலாம். இது தவிர ரொட்டியுடன் கூட சாப்பிடலாம். 

மேலும் படிக்க | டீ குடிக்கும் நேரத்தில் சிகிரெட் பிடித்தால் ஆபத்து உங்கள் அருகில்!!

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News