அதிகரிக்கும் கள்ளநோட்டுகள்: போலி 500 ரூபாய் நோட்டை எவ்வாறு கண்டறிவது!

Fake Indian Currency: ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 2, 2022, 06:28 PM IST
  • ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போதும் மிகுந்த எச்சரிக்கை தேவை.
  • நாட்டில் போலி நோட்டுகள் கைப்பற்றப்படுவது அதிகரித்து வருகிறது.
  • சில வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கும் கள்ளநோட்டுகள்: போலி 500 ரூபாய் நோட்டை எவ்வாறு கண்டறிவது! title=

நாட்டில் போலி நோட்டுகள் கைப்பற்றப்படுவது அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல், சுமார் 60 சதவீதம் ரூபாய் 2,000 மதிப்புடையவை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதால், ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் போலியானதா? என்பதை எப்படி கண்டிப்பிடிப்பது என சில வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. 

போலி 500 ரூபாய் நோட்டை எவ்வாறு கண்டறிவது:

ரூபாய் நோட்டின் முன் பக்கம்:

1. ரூபாய் மதிப்பு எண்ணின் ஸீ-த்ரூ ரெஜிஸ்டர் (ஒளி புகும்போது காட்சி தெரியும்)

2. ரூபாய் மதிப்பு எண்ணின் மறைவிம்பம் (மறைமுகமாக காணப்படும்)

3. தேவநாகிரி எழுத்தில் ரூபாய் மதிப்பு எண்.

4. மகாத்மா காந்தி புகைப்படத்தின் நோக்குநிலை மற்றும் நிலையில் மாற்றம்.

5. ரூபாய் நோட்டை சாய்க்கும்போது, விண்டோட் செக்யூரிட்டி த்ரெட்டின் (பாதுகாப்பு தொடர் வரி) நிறம் பச்சையிலிருந்து நீலமாக மாறும்.

6. உத்தரவாத விதி, உறுதிப்பாட்டு விதியைக் கொண்டுள்ள ஆளுநரின் கையெழுத்து மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னம் ஆகியவை வலது பக்கம் நகர்த்தப்பட்டுள்ளன.

7. போர்ட்ரைட் மற்றும் எலக்ட்ரோடைப் (மின்தட்டச்சு) வாட்டர்மார்க்.

8. மேல்பக்க இடது புறத்திலும் கீழ்பக்க வலது புறத்திலும் சிறிய அளவிலிருந்து பெரிய அளவில் காணப்படும் எண் குழு

9. கீழ் பக்க வலதுபுறத்தில் ரூபாய்க்கான சின்னத்துடன் மாறும் வண்ணத்தில் (பச்சையிலிருந்து நீலம்) ரூபாய் மதிப்பு எண்.

10. வலதுபுறத்தில் அசோகர் சின்னம்.

மேலும் படிக்கவும்: RBI Alert: பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் விற்பவர்கள் ஜாக்கிரதை

ரூபாய் நோட்டின் பின் பக்கம்:

1. நோட்டின் இடதுபுறத்தில் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு.

2. 'ஸ்வச்ச பாரத்' லோகோவும் (சின்னமும்) அதன் சொற்றொடரும் (ஸ்லோகன்).

3. மத்தியில் மொழிகளின் பேனல்.

4. செங்கோட்டை - இந்திய கொடியுடன் காணப்படும் இந்திய பாரம்பரிய தளம்.

5. வலதுபுறத்தில்  தேவநாகிரியில் ரூபாய் மதிப்பு எண்.

கண்பார்வையற்றவர்களுக்கான அம்சங்கள்:

1. மகாத்மா காந்தி புகைப்படம், அசோகர் சின்னம், தொடர் வரிகள் மற்றும் அடையாள குறியீடுகள் ஆகியவை அடையாளம் கண்டறியப்படும் வகையில் சற்றே உயர்ந்திருக்கும். 

2. வலதுபுறத்தில் 'ரூ.500' இருக்கும் வட்டம் உயர்த்தப்பட்ட அச்சில் இருக்கும். 

3. வலது மற்றும் இடது புறம் உள்ள 5 ப்ளீட் வரிகள் உயர்த்தப்பட்ட அச்சில் இருக்கும். 

மேலும் படிக்கவும்:  வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு: நிதி அமைச்சகம் கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News