NRI சூப்பர் செய்தி: மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

Bharat Bill Payment System for NRI: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்களுக்கு உதவக்கூடிய ஒரு முக்கிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 6, 2022, 01:54 PM IST
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன்பாட்டு பில்களை செலுத்தலாம்.
  • ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
NRI சூப்பர் செய்தி: மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி title=

பாரத் பில் கட்டண முறை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டில் தங்கியிருந்தாலும், நாட்டில் வசிக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் மின் கட்டணம் முதல் பள்ளிக் கட்டணம் வரை பல வித கட்டணங்களை செலுத்த முடியும். பணவியல் கொள்கையை அறிவிக்கும் போது, ​​இந்த வசதியை அறிமுகம் செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன்பாட்டு பில்களை செலுத்தலாம்

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் (என்ஆர்ஐ) பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் வசதியை ஏற்படுத்தப் போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்கள், நாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதிலாக கல்விக் கட்டணங்கள், பயன்பாட்டுக் கட்டணங்கள் என பல வித கட்டணங்களையும் செலுத்த முடியும். 

மேலும் படிக்க | UAE: திர்ஹமிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை உற்று நோக்கும் NRI 

பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) என்பது பில் பணம் செலுத்துவதற்கான ஒரு இண்டர்ஆபரபிள் தளமாகும். 20,000 க்கும் மேற்பட்ட பில்லர்கள் இந்த அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் 8 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் இந்த தளத்தில் நடக்கின்றன. 

மூத்த குடிமக்களுக்கு பெரிய நன்மை

இப்போது இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தை (பிபிபிஎஸ்) பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு வாழ் இந்தியர்களான என்ஆர்ஐ-களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம், பில் செலுத்தும் முறைகளில் பயனர்களுக்கு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதில் பெரும் பணியை செய்துள்ளது என்றார். 

இப்போது இந்த அமைப்பு எல்லைக்கு அப்பால் இருந்தும் இன்வார்ட் பில் கொடுப்பனவுகளை ஏற்கும். இதன் மூலம் இனி வெளிநாடு வாழ் இதியர்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக அனைத்து பயன்பாடு, கல்வி மற்றும் பிற பில்களை செலுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார். இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்றார் அவர். இது தொடர்பான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.

மேலும் படிக்க | NRI இந்தியாவில் சொத்து வாங்க முடியுமா? இதற்கான விதிகள் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News