புதுடெல்லி: கடந்த சில நாட்களாக பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்கி விற்கும் ஆர்வம் தீவிரமடைந்துள்ளது. பலர் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
எனினும், ரிசர்வ் வங்கி சமீபத்தில் இது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்வதற்கு சில மோசடிக் கூறுகள் மத்திய வங்கியின் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துகின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நீங்களும் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ தயாராக இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கி அளித்துள்ள இந்தத் தகவலைச் சரிபார்க்கவும். ஆன்லைன் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதற்காக தினமும் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர்.
ட்வீட் மூலம் ரிசர்வ் வங்கி கூறியது என்ன?
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சிலர் தவறாக பயன்படுத்துகின்றன என்றும் பல்வேறு ஆன்லைன், ஆஃப்லைன் தளங்கள் மூலம் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்க, மக்களிடம் கட்டணம் / கமிஷன் வசூலித்து வருகின்றன என்றும் ரிசர்வ் வங்கிக்கு தெரிய வந்துள்ளது.’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இந்த ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? வீட்டிலிருந்தபடியே லட்சாதிபதி ஆகலாம்
'இது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆர்பிஐ ஈடுபடவில்லை. அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு யாரிடமும் கட்டணம் அல்லது கமிஷன் எதையும் வங்கி கேட்காது.’ என ரிசர்வ் வங்கி மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதே நேரத்தில், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ எந்தவிதமான அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்றும் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை
ரிசர்வ் வங்கி இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதில்லை. இப்படிப்பட்ட விஷயங்களுக்கு யாரிடமும் எந்த வித கட்டணம் / கமிஷனையும் கேட்பதில்லை. “இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஒரு நிறுவனம் அல்லது தனி நபருக்கு ரிசர்வ் வங்கியின் சார்பாக எந்தவொரு கட்டணத்தையும் கமிஷனையும் வசூலிக்க எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. இதுபோன்ற போலியான மற்றும் மோசடியான சலுகைகளின் வலையில் சிக்க வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.” என்றும் வங்கி கூறியுள்ளது.
மேலும் படிக்க | ஜாக்பாட் செய்தி: இந்த ரூ.5, ரூ.10 நாணயங்கள் இருந்தா லட்சாதிபதி ஆகலாம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR