சரியான காதலை உங்கள் வாழ்கைக்குள் வரவேற்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்!

உங்கள் வாழ்வில் சரியான காதல் உறவை அழைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் சில விஷயங்களை செய்தால் போதும்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 13, 2023, 07:56 PM IST
  • காதலை உங்கள் வாழ்க்கையில் வரவேற்பது ஈசி.
  • இதற்காக சில செயல்களை செய்ய வேண்டும்.
  • அதற்கான சில டிப்ஸ்.
சரியான காதலை உங்கள் வாழ்கைக்குள் வரவேற்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்! title=

அனைத்து உறவுகளும் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும். இது, உங்கள் வாழ்வில் புதிதாக ஒரு அத்தியாத்தை தொடங்குவதற்கு உறுதுணையாக இருக்கும். ஆனால், ஒரு சிலருக்கு அந்த காதல் வெகு விரைவிலேயே தேடாமல் கிடைத்துவிடும். ஒரு சிலருக்கு எவ்வளவு தேடினாலும் கிடைக்காது. பலருக்கு காதல் கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் இருக்கும். உண்மையான, அர்த்தமுள்ள காதல் உறவை உங்களது வாழ்வில் இணைத்துக்கொள்வது எப்படி? இங்கு பார்க்கலாம். 

காதல் ரிலேஷன்ஷிப்பை வரவழைக்க டிப்ஸ்:

நாம் என்ன நினைக்கிறோமோ அதை நனவாக்க நம்மிடம் சக்தி உள்ளது. இதைத்தான் Manifesting என்று கூறுவார்கள். அதாவது, இதுவரை நாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படும் விஷயத்திற்காக தொடர்ந்து அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். ஆனால், அது கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் பலமாக வைத்திருக்க வேண்டும். அதற்கான சில டிப்ஸை இங்கு பார்க்கலாம். 

உங்கள் ஆசைகளை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்:

சரியான உறவுக்கான உங்கள் தேடலைத் தொடங்குவதற்கு முன், நீங்கள் உண்மையிலேயே விரும்புவதை வரையறுக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களது காதலர் அல்லது காதலியிடம் நீங்கள் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என தெளிவாக வரையறுக்க வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும் உறவை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கண்களை மூடிக்கொண்டு, உங்கள் கற்பனையை வேகமாக மனதிற்குள் ஓட விடுங்கள். உங்கள் கனவு உறவை தெளிவாக, உண்மையாகவே நடப்பது போல மனதிற்குள் காட்சிப்படுத்துங்கள். நீங்கள் ஒன்றாக பகிர்ந்து கொள்ளும், தருணங்கள், சிரிப்பு மற்றும் ஆதரவைப் மனதிற்குள் படமாக்குங்கள். 

மேலும் படிக்க | உங்கள் வாழ்க்கையில் பண மழை பெய்ய வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!

யாரை தேடுகிறீர்களோ அவராகவே மாறுங்கள்:

எந்த மாதிரியான வாழ்க்கை துணையை தேடுகிறீர்களோ, அவர்களாகவே மாற கற்றுக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு உங்களுக்காக வரக்கூடியவர் பாசமாக, பிறரிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அப்படி அன்பானவராக மாறுங்கள். நீங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அன்பை பிறருக்காக கொடுங்கள். உங்கள் மீது அதிகமாக அன்பும் மரியாதையும் வைத்துக்கொள்ளுங்கள். முந்தைய காதல் உறவுகளில் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டீர்கள் என்றால், அதை வாழ்வியல் முறையில் தினமும் உபயோகியுங்கள். உங்களை நீங்கள் அதிகமாக பிறரை விரும்ப ஆரம்பித்தால் பிறரும் உங்களை விரும்புவார்கள். 

உங்கள் செயல்களை சீரமைக்கவும்:

நீங்கள் என்ன செயல்களை செய்ய நினைக்கிறீர்களோ அதை நோக்கி உறுதியான அடிகளை எடுத்து வையுங்கள். அனைவரும் பரிபூர்ணமாக சரியான ஆளாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உங்களது எதிர்பார்ப்புகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் கண்டிப்பாக பல அன்பான செயல்கள் உங்களுக்கும் நடக்கும்.

நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்:

உங்கள் நோக்கங்களை அமைத்து, உங்கள் சிறந்த உறவை நோக்கி அடியெடுத்து வைக்கும் போது இந்த பிரபஞ்சமும் உங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து தரும். உங்கள் மனதில் உள்ள தயக்கங்கள், பதற்றம் என அனைத்தையும் விட்டொழித்து விடுங்கள். உங்கள் மனதை பாதுகப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு முக்கியம், அதை திறந்து வைத்துக்கொள்வது. நீங்கள் அனைத்து அன்பிற்கும், காதலுக்கும், நல்ல உறவுகளுக்கும் தகுதியானவர் என்பதை நம்புங்கள். 

மேலும் படிக்க | அசிங்கமாக தொங்கும் தொப்பையைக் குறைக்கணுமா? இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News