18 ஆண்டுகள் பாலியல் உறவை மறுத்த மனைவி... நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு!

மனைவி பாலியல் உறவை மறுப்பது கணவனுக்கு செய்யும் கொடுமை என தில்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2023, 07:25 PM IST
  • திருமணம் ஆன நபர் வேண்டுமென்றே பாலியல் உறவை மறுப்பது கொடுமைக்கு சமம்
  • மனைவி வரதட்சணைக்காக துன்புறுத்தப்பட்டதாகக் கூறி போலீஸ் புகார் அளித்தார்.
  • 2004 ஆம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்.
18 ஆண்டுகள் பாலியல் உறவை மறுத்த மனைவி... நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு! title=

புதுடெல்லி: மனைவி வேண்டுமென்றே பாலியல் உறவை மறுப்பது கணவனை கொடுமைப்படுத்துவதாகும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனைவியின் மேல்முறையீட்டை நிராகரித்த நீதிபதி சுரேஷ் குமார் கைட் தலைமையிலான பெஞ்ச், உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் "பாலுறவு இல்லாத திருமணம் என்பது வெறுப்பை கொடுக்கக் கூடியட்து" என்றும், "பாலியல் உறவில் ஏமாற்றம் என்பதை விட திருமணத்தின் மீதான மிகப் பெரிய ஏமாற்றம் என்றும் நீதிமன்றம்  கூறியுள்ளது. 

தற்போதைய ஒரு வழக்கில், தில்லி நீதிமன்றம் நடத்திய விசாரணையில், மனைவி தொடர்ந்து விவாகரத்து பெற எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக விவாகரத்து பெற முடியவில்லை என்றும், மேலும் மனைவி வரதட்சணைக்காக துன்புறுத்தப்பட்டதாகக் கூறி போலீஸ் புகார் அளித்தார் என்றும் தெரிய வந்தது. ஆனால் அதில் "எந்த ஆதாரமும் இல்லை" என அறிந்த நீதிமன்றம், இதனை கொடுமை என்றும் கூறலாம்  என கருத்து தெரிவித்துள்ளது.

"(ஒரு வழக்கில்), உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில்... திருமணம் ஆன ஒரு நபர், தனது துணைக்கு வேண்டுமென்றே பாலியல் உறவை மறுப்பது கொடுமைக்கு சமம் என்று கூறியது. குறிப்பாக புதிதாக திருமணமானவர்களுக்கு விவாகரத்து வழங்குவதற்கான காரணம் இது ஒன்றே போதும் " என்று கூறினார். நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அடங்கிய அமர்வு, செப்டம்பர் 11 தேதியிட்ட உத்தரவில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

"தற்போதைய வழக்கில், இரு மனு தாரருக்கும் இடையிலான திருமணம் வெறும் 35 நாட்களுக்கு நீடித்தது மட்டுமல்லாமல், திருமண உரிமைகள் பறிக்கப்பட்டதாலும், திருமணம் குறித்த பெரிய ஏமாற்றம் இருந்ததாலும், முற்றிலும் தோல்வியடைந்தது" என்று நீதிமன்றம் கூறியது. மேலும், 18 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு, வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த இழப்பு மனக் கொடுமைக்கு சமம் என்பதை புறக்கணிக்க முடியாது எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.

இருவரும் 2004 ஆம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும், மனைவி திருமணம் ஆன உடனேயே தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று திரும்பவில்லை என்றும் நீதிமன்றம் தனது விசாரணையில் பதிவு செய்தது. கணவர் பின்னர், மனைவி வீட்டை வெளியேறி, ஒன்றாக வாழ மறுப்பு தெரிவித்ததன் அடிப்படையில் விவாகரத்துக்காக குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்.

மேலும் படிக்க | டெக்னாலஜியை யூஸ் பண்ணுங்க... வழக்கறிஞர்களை அறிவுறுத்திய தலைமை நீதிபதி!

நீதிமன்றம் தனது உத்தரவில், குடும்ப நீதிமன்றம் "சரியான முடிவு" என்று கூறியது, பிரிந்து சென்றதற்கான காரணம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், கணவனிடம் மனைவி நடந்து கொண்ட விதம்  கொடுமையானது, அவருக்கு விவாகரத்து ஆணையை வழங்க முடியும் என கூறியது.

"வரதட்சணை துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் வரதட்சணைக் கோரிக்கையின் ஒரு சம்பவத்தை கூட மேல்முறையீட்டாளர் நிரூபிக்கத் தவறினால், அதைத் தொடரும் விசாரணை ஒரு கொடூரச் செயலாகக் கருதப்படும்" என்று கூறியிருந்தது.

"(ஒரு வழக்கில்), உச்ச நீதிமன்றம் மனக் கொடுமைக்கு வழிவகுக்கும் பல்வேறு செயல்களை பட்டியலிட்டு வகுத்துள்ளது. அத்தகைய செயல்களில் ஒரு எடுத்துக்காட்டு உடல் இயலாமை அல்லது சரியான காரணம் இல்லாமல் கணிசமான காலத்திற்கு உடலுறவு கொள்ள மறுக்கும் ஒருதலைப்பட்ச முடிவு, மனக் கொடுக்கைக்கு சமம்" என்று நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தை முடிக்க கணவனை மனைவி அனுமதிக்கவில்லை என்பது பதிவுகளில் உள்ள ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று நீதிமன்றம் கூறியது.

மேலும் படிக்க | செவ்வாய் தோஷம் படுத்தும் பாடு! தானாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News