Train Fare Rising: காய்கறி முதல் பெட்ரோல் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கும் நிலையில், ரயில் பயணத்துக்கான கட்டணமும் விரைவில் உயரத்த மத்திய ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் குறைந்த செலவில் பயணக்க ரயில்சேவையை மக்கள் அதிகளவு நம்பியிருக்கும் சூழலில் மறைமுகமாக ரயில் பயணங்களுக்கான கட்டணத்தை உயர்த்த புதிய யுக்தியை மத்திய ரயில்வேத்துறை எடுத்துள்ளது. அதாவது அதிவேக ரயில்களில் இருக்கும் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. மேலும், ஏசி பெட்டிகளை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | Tatkal Ticket Booking: வெறும் 3 ஸ்டெப்ஸ் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
இதன் மூலம் சாதாரண படுக்கை வசதி மற்றும் முன்பதிவில்லா குறைத்தால், ஏசி பெட்டிகளில் முன்பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் சாதாரண மக்கள் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பெட்டிகளை மட்டுமே பெரும்பாலும் நம்பியிருக்கும் சூழலில், அந்த பெட்டிகளை குறைக்கும்போது அதிக தொகை கொடுத்து டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அல்லது ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை உருவாகும்.
பேருந்து மற்றும் விமான டிக்கெட்டுகளை விட குறைவான பயணத்தை ரயிலில் மட்டுமே மேற்கொண்டு வந்த மக்களுக்கு, இனி அந்த பயணமும் காஸ்டிலியாக மாறிவிட வாய்ப்புகள் இருக்கிறது. இதனால், ஏற்கனவே கடும் நெரிசலாக இருக்கும் முன்பதிவில்லா பெட்டிகள் மற்றும் முன்பதிவு பெட்டிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, மறைமுகமாக ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மத்திய ரயில்வே துறை கைவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் ஏசி பெட்டிகளை அதிவேக ரயிலில் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டுகளில் லோயர் பெர்த் வேண்டுமா? IRCTC வெளியிட்ட புதிய விதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR