LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ரூ.50,000 ஓய்வூதியம்

LIC Pension Plan: சரல் பென்ஷன் யோஜனா என்பது உடனடி வருடாந்திரத் திட்டமாகும். அதாவது பாலிசி எடுத்தவுடனேயே வாடிக்கையாளர்கள் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 16, 2023, 10:35 AM IST
  • இத்திட்டத்தின் பயன் பெற குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆகும்.
  • அதிகபட்ச வயது வரம்பு 80 ஆகும்.
  • இந்த பாலிசியில், ஓய்வூதியத்தின் பலன் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ரூ.50,000 ஓய்வூதியம் title=

எல்ஐசி ஓய்வூதியத் திட்டம்: இந்திய மக்கள் பலரின் நம்பிக்கைக்கு பாத்திரமான முதலீட்டு திட்டங்களை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது.  எல்ஐசி, மக்களின் எதிர்கால தேவைக்கு ஏற்ற சிறப்பான காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.  பல நிறுவனங்கள் மக்களுக்கு முதலீட்டு திட்டங்களை வழங்கி வரும் நிலையில் எல்ஐசி தொடர்ந்து அதன் சிறப்பான காப்பீட்டு திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. 

வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசி மூலம் பல வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தைப் பெறும் வகையில் கிடைக்கும் ஒரு மகத்தான எல்ஐசி திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். எல்ஐசி -யின் இந்த அற்புதமான திட்டத்தில் நீங்கள் மொத்தத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் 40 வயதிலிருந்தே ஓய்வூதியத்தின் பலனைப் பெறத் தொடங்குவீர்கள். எல்ஐசி -யின் இந்தக் திட்டத்தின் பெயர் சரல் பென்ஷன் யோஜனா ஆகும்.

ஒற்றை பிரீமியம் திட்டம் (Single premium plan)

எல்ஐசியின் சரல் பென்ஷன் யோஜனா என்பது ஒற்றை பிரீமியம் ஓய்வூதியத் திட்டமாகும். இதில் பாலிசி எடுக்கும் போது ஒரு முறை பிரீமியத்தைச் செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். பாலிசிதாரர் இறந்துவிட்டால், பிரீமியத்தின் தொகை அவரது நாமினிக்கு திருப்பித் தரப்படும். சரல் பென்ஷன் யோஜனா என்பது உடனடி வருடாந்திரத் திட்டமாகும். அதாவது பாலிசி எடுத்தவுடனேயே வாடிக்கையாளர்கள் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். இந்த பாலிசியை எடுத்த பிறகு, வாடிக்கையாளர்களுக்கு ஓய்வூதியமாக எவ்வளவு தொகை கிடைக்கிறதோ, அதே அளவு ஓய்வூதியம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

மேலும் படிக்க | LIC Bima Ratna : நாள் ஒன்றுக்கு ரூ.138 முதலீட்டில், ரூ.13.5 லட்சம் வரை அள்ளலாம்!

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

- இத்திட்டத்தின் பயன் பெற குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு 80 ஆகும். 

- இந்த பாலிசியில், ஓய்வூதியத்தின் பலன் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

- சரல் பென்ஷன் பாலிசியை தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்யலாம்.

- ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் ஓய்வூதியம் பெற வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 

- வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

இந்த எளிய ஓய்வூதியத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, 40 வயது உள்ள ஒரு நபர் ரூ.10 லட்சத்தை ஒரே பிரீமியமாக டெபாசிட் செய்துள்ளார் என வைத்துக்கொண்டால், பிறகு அவருக்கு ஆண்டுதோறும் ரூ.50,250 கிடைக்கும். இந்த தொகை வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இது தவிர, நீங்கள் டெபாசிட் செய்த தொகையை இடையில் திரும்பப் பெற விரும்பினால், அத்தகைய சூழ்நிலையில், 5 சதவீதத்தை கழிக்கப்பட்டு, நீங்கள் டெபாசிட் செய்த தொகையை திரும்பப் பெறுவீர்கள்.

கடன் வசதியின் பலனும் கிடைக்கும்.

எல்ஐசியின் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் நன்மை என்னவென்றால், நீங்கள் அதன் மீது கடன் பெறும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிக்கையாளர் ஏதாவது கடுமையான நோயால் அவதிப்பட்டால், அதன் சிகிச்சைக்கான தொகையையும் இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வூதியத் திட்டத்துடன், உங்களுக்கு கடுமையான நோய்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. பாலிசியை சரண்டர் செய்தால், அடிப்படை விலையில் 95% திரும்ப அளிக்கப்படும். திட்டத்தைத் தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | LIC Jeevan Tarun Policy: வெறும் ரூ.171 முதலீட்டில் ரூ. 28.24 லட்சம் பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News