LIC: பெண்கள் வாழ்வில் விளக்கேற்றும் திட்டம்... மாதம் 1800 போதும்... முழு விவரம் இதோ!

முதலீடு என்பது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய விஷயம். நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து அதிகபட்ச வருமானத்தைப் பெறக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்லாம். அதற்கு சந்தையில் பல வழிமுறை உள்ளன.

எல்ஐசி தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற பல்வேறு வகையான காப்பீட்டுக் கொள்கைகளுடன் வெளிவருகிறது. அதில் ஒரு திட்டம் குறித்து இங்கு காண்போம்.

1 /6

எல்ஐசியின் ஆதார் ஷீலா, பெண்களின் வாழ்க்கைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது உங்களின் பண பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் முதிர்ச்சிக்கு முன், எந்த நேரத்திலும் பாலிசிதாரர் துரதிருஷ்டவசமாக மரணமடைந்தால், அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கிறது. ஆனால், மற்ற பாலிசிதாரருக்கு முதிர்வு நேரத்தில் மொத்தத் தொகையை வழங்குகிறது. கூடுதலாக, இந்தத் திட்டம், அதன் ஆட்டோ கவர் மற்றும் கடன் வசதி மூலம் பணப்புழக்கத் தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது.

2 /6

நீங்கள் 30 வயதில் திட்டத்தைத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு ரூ. 58 நீங்கள் சேமிக்கிறீர்கள் என்றால், ஒரு வருடத்தில் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் 21,918 ரூபாயை செலுத்தலாம். 20 ஆண்டுகளில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 392 ரூபாய் முதலீடு செய்வீர்கள். பாலிசி முதிர்ச்சியின் போது 7 லட்சத்து 94 ரூபாயை திரும்பப் பெறுவீர்கள். 

3 /6

இந்த திட்டம் எந்த மருத்துவ சிகிச்சையிலும் இல்லாத நிலையான ஆரோக்கியமானவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

4 /6

ஒருவருக்கான குறைந்தபட்ச அடிப்படைத் தொகை: ரூ 75 ஆயிரம் ஒருவருக்கான அதிகபட்ச அடிப்படைத் தொகை: ரூ. 3 லட்சம் அடிப்படைக் காப்பீட்டுத் தொகை ரூ. 5,000 இன் மடங்குகளில் ரூ. 75,000 முதல் ரூ. 1,50,000 வரை இருக்கும். ரூ.1,50,000க்கு மேல் உள்ள அடிப்படைத் தொகைக்கு ரூ.10,000

5 /6

குறைந்தபட்ச வயது: 8 ஆண்டுகள் அதிகபட்ச வயது: 55 ஆண்டுகள்

6 /6

பாலிசி காலம்: 10 முதல் 20 ஆண்டுகள் பாலிசி முதிர்ச்சியின் அதிகபட்ச வயது: 70 ஆண்டுகள்.