சனி பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும், செல்வம் பெருகும்

Sani Peyarchi 2022: 4 ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 8, 2022, 12:03 PM IST
  • ஏப்ரல் 2022 இல் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது.
  • இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
  • 4 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.
சனி பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும், செல்வம் பெருகும் title=

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஏப்ரலில் நீதிக் கடவுளான சனிபகவான் ராசி மாறுகிறார். 29 ஏப்ரல் 2022 அன்று, அவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைவார். 

சனி பெயர்ச்சி 2022

இந்த சனி பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அசுபமான அல்லது சராசரியான பலன்களைத் தரும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். 

சனியின் பெயர்ச்சி இவர்களின் வாழ்க்கையில் பெரிய மற்றும் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். இவர்கள் அதிக முன்னேற்றம் மற்றும் பண வரவை பெறுவார்கள். இதனுடன், பல மகிழ்ச்சிகள் இவர்களது வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும். 

சனி பெயர்ச்சி 2022: 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

ரிஷபம்: 

இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும். பண வரவு அதிகமாக இருக்கும். இவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்துல் ரிஷப ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் வணிகத்தில் ஈடுபடுள்ளவர்களுக்கும் இந்த நேரம் ஏற்றது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவார்கள். உங்கள் பணிகள் பாராட்டப்படும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் நடந்துமுடியும். 

சிம்மம்: 

சிம்ம ராசிக்கு சனி பெயர்ச்சி நிதி நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெரிய தொகை ஒன்று வந்து சேரும். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் திடமான ஊதிய உயர்வு உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த நேரம் தொழில் மற்றும் பணத்தின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | மகளிர் தினத்தில் இந்த ராசி பெண்கள் இதை செய்தால் அதிஷ்டம் நிச்சயம்!

கன்னி: 

சனியின் சஞ்சாரம் கன்னி ராசியினரின் பொருளாதார நிலையை பலப்படுத்தும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பல்வேவேறு வழிகளிலும் பண வரவு இருக்கும். அதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

புதிய வேலையைத் தொடங்கவோ அல்லது வேலையை மாற்றவோ இது நல்ல நேரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் அமையும்.

தனுசு: 

சனிப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும். தடைபடிருந்த அனைத்து வேலைகளும் எளிதாக நடக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். 

நீங்கள் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளக்கூடும். இந்த பயணத்தால், மன அமைதி, மாறுதல், பண வரவு என அனைத்தும் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்கவில்லை.) 

மேலும் படிக்க | இந்த ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையும்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News