ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம், பணம் கொட்டும், லாபம் பெருகும்

Astrology: ஜோதிடத்தில் ராகு ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுகிறார். எனினும், ராகு நல்ல பலன்களையும் தருகிறார். இந்த ஆண்டு நடக்கப் போகும் ராகுவின் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களின் விதியை மாற்றும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 7, 2022, 12:10 PM IST
  • ராகுவின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கு முழு பலனைத் தரும்.
  • தொழிலதிபர்களுக்கும் இது நல்ல நேரமாக இருக்கும்.
  • இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் லாபம் ஈட்டித்தரும்.
ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம், பணம் கொட்டும், லாபம் பெருகும்  title=

ஜோதிடத்தில், ராகு ஒரு பாவ மற்றும் கொடூரமான கிரகமாக கருதப்படுகிறது. அதன் மோசமான விளைவு வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. ஜாதகத்தில் ராகுவின் மோசமான நிலை இருந்தால், கடுமையான பேச்சு, தோல் நோய்கள் ஆகியவற்றுக்கு ஆளாக நேரிடலாம். 

இருப்பினும், ராகு ஆன்மீக பயணங்கள் மற்றும் அரசியலுக்கும் காரணியான கிரகமாக அமைந்துள்ளது. பொதுவாக, சனியைப் பார்த்து அச்சப்படுவது போலவே ராகுவைப் பார்த்தும் மக்கள் அச்சப்படுவது உண்டு. ராகு எப்பொழுதும் அசுப பலன்களைத் தருபவர் இல்லை. அவர் பல சுப பலன்களையும் தருகிறார். மெதுவாக நகரும் ராகு தேவன் 18 மாதங்களுக்குப் பிறகு ஜூலை 12, 2022 அன்று தனது ராசியை மாற்றப் போகிறார். ராகுவின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும்

மிதுனம்: ராகுவின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கு முழு பலனைத் தரும். குறிப்பாக நிர்வாக சேவைகளுடன் தொடர்புடைய நபர்கள் பல சிறந்த சாதனைகளை செய்யக்கூடும். தொழிலதிபர்களுக்கும் இது நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் லாபம் ஈட்டித்தரும். 

மேலும் படிக்க | வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிக இருக்கும் 4 ராசிகள்..!! 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் பெருமளவு பண வரவை கொண்டு வரும். அவர்களின் நிதி நிலையில் பெரிய மாற்றத்தைக் காண முடியும். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரம் செழிக்கும். முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு மாற்றத்தால் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். இந்த நேரத்தில், பணம் ஈட்டுவதோடு அதை அதிக அளவில் சேமிப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது நல்ல நேரமாக இருக்கும். முதலீட்டில் பெரிய அனுகூலம் உண்டாகும். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். அதிக பணம் ஈட்ட நல்ல நேரம் இது. நீங்கள் இந்த காலத்தில் வலுவான வங்கி இருப்பை உருவாக்க முடியும். முதலீடுகள், பங்குச் சந்தை ஆகியவற்றில் லாபம் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பகவானின் அருளை பரிபூரணமாக என்றும் பெறும் ‘3’ ராசிக்காரர்கள்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News