சனி பகவானின் அருளை பரிபூரணமாக என்றும் பெறும் ‘3’ ராசிக்காரர்கள்..!!

ஆண்டியை அரசனாகவும், அரசனை ஆண்டியாகவும் மாற்றும் ஆற்றல் சனியின் அருளுக்கு உண்டு. சில ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்நாள் முழுவதிலும் சனியின் ஆசி கிடைக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 6, 2022, 02:38 PM IST
  • அதிர்ஷ்டக்கார 3 ராசிக்காரர்கள்
  • சனியின் அருள் எப்போதும் கிடைக்கும்
  • இந்த ராசிக்காரர்களின் ஒவ்வொரு கனவும் நனவாகும்.
சனி பகவானின் அருளை பரிபூரணமாக என்றும் பெறும் ‘3’ ராசிக்காரர்கள்..!! title=

சிலர் அதிர்ஷ்டசாலியாக பிறக்கிறார்கள். எந்த வேலை செய்தாலும் எளிதில் வெற்றி பெறுவார்கள். அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பதுடன் பெயரையும் சம்பாதிக்கிறார்கள். இதற்குப் பின்னால் சனியின் அருள் எப்போதும் இருப்பதே காரணம். உண்மையில், நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். சனி பகவான், 3 ராசிக்காரர்களிடம் எப்போதும் கருணையுடன் இருப்பார். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி, சனிப்பெயர்ச்சி, சனி மகாதசை போன்ற அனைத்து நேரங்களிலும், அதிர்ஷ்டம் அவர்களை விட்டு விலகாது.

சனி பகவான் அருளை பெறும் ராசிகள்

துலாம்: சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசியாக துலாம் கருதப்படுகிறது. இதனாலேயே துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் எப்போதும் உண்டு. அவர்கள் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். பொதுவாக அவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு இலக்கையும் அடைவார்கள். இவர்கள் சனி சாலிசாவை பாராயணம் செய்தால், சனியின் அருள் என்றென்றும்  கிடைக்கும்.

மேலும் படிக்க | காதல் உறவை ஒரு போதும் கைவிடாத ‘5’ ராசிக்காரர்கள்..!!

கும்பம்: கும்ப ராசிக்கு அதிபதி சனி இந்த ராசிக்காரர்களிடம் எப்போதும் கருணை காட்டுபவர். சனியின் அருளால், இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள், நல்ல தலைவர்கள், அநீதிக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள். இவர்கள் நல்ல தலைவர்களாக இருந்து நிறைய புகழும் பெயரும் சம்பாதிப்பார்கள்.

மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்!

மகரம்: மகர ராசிக்கு சொந்தக்காரரும் சனி கிரகம்தான். சனியின் அருளால் இவர்கள் கடினமாக உழைத்து நினைத்ததை சாதிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் சனியின் அருளால் வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெறுவார்கள், அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சிறந்த முன்னேற்றத்தை அடைகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astrology: சுக்கிரன் பெயர்ச்சியினால் குபேரன் ஆகப் போகும் ‘3’ ராசிக்காரர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News