இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீரென பணம் வரவு உண்டாகும்

 ராசிபலன் பிப்ரவரி 21, 2022: திங்கட்கிழமை உங்களுக்கு வேலையில் வெற்றியைத் தரும். நீங்கள் எங்கிருந்தோ திடீரென்று பணம் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2022, 05:54 AM IST
  • இன்று வேலையில் வெற்றி கிடைக்கும்
  • தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம்
  • விருந்தினர்கள் வீட்டிற்கு வரலாம்
இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீரென பணம் வரவு உண்டாகும் title=

ராசிபலன் பிப்ரவரி 21, 2022: திங்கட்கிழமை உங்களுக்கு வேலையில் வெற்றியைத் தரும். வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம். மகர ராசிக்காரர்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திங்கட்கிழமை உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை எங்களுக்குத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்: இன்றைய நாள் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். கையில் எடுக்கும் எந்தப் பணியிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் வேலையில் நல்ல பலன்களும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்லவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள், அவர்கள் வேலையில் வெற்றி பெற உதவுவார்கள். உங்கள் பிரகாசமான எதிர்காலத்தில் புதிய நட்பு உதவியாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நல்லுறவு உருவாகும்.

மேலும் படிக்க | பிப்ரவரி 27 முதல் சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள்! ரிஷபத்திற்கு சூப்பர் யோகம் 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மந்தமான நாள்.

கடகம்: நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். பயணங்கள் கைகூடும் நாள்.

சிம்மம்: பத்திரிக்கை தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயமான பலன்கள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சொத்துப் பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி: குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் ஒருவிதமான ஆசைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சிலரது சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கலகலப்பான நாள். 

துலாம்: தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். காதில் இருந்துவந்த இன்னல்கள் மற்றும் வலிகள் குறையும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றமான சூழல் ஏற்படும். புதுமையான நாள்.

விருச்சிகம்: உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு பயணம் செய்வது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகமும், ஒப்பந்தங்களும் சாதகமாகும். முயற்சிகள் நிறைந்த நாள்.

தனுசு: எந்தவொரு செயலிலும் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பூமி விருத்திக்கான சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். லாபகரமான நாள்.

மகரம்: பணிபுரியும் இடத்தில் நிதானம் வேண்டும். சிலருக்கு முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடி வரும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். படபடப்பான நாள்.

கும்பம்: பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சுயதொழிலில் லாபம் மேம்படும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள். 

மீனம்: உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு வேண்டும். அதிகாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப செயல்படுதல் அவசியம் ஆகும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்ககளுக்கு சவாலாக இருக்கலாம், ஜாக்கிரதை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News