Google-லிடம் 2020-யில் இந்தியர்கள் கேட்ட Top 10 கேள்விகள் என்ன தெரியுமா?

2020 ஆம் ஆண்டின் அனைத்து தாக்கங்களையும், கொடுமைகளையும், யதார்த்தங்களையும் பிரதிபலிக்கும் வகையில் கூகிளின் டாப் 10 கேள்விகள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2020, 04:48 PM IST
  • இந்தியாவில் கூகிளில் அதிகம் கேட்கப்பட்ட முதல் 10 கேள்விகளின் பட்டியலை கூகிள் வெளியிட்டுள்ளது.
  • ‘கொரோனா வைரஸ் என்றால் என்ன’ என்ற கேள்வி பட்டியலில் முதலில் உள்ளது.
  • CAA, NRC பற்றிய கேள்விகளும் பட்டியலில் உள்ளன.
Google-லிடம் 2020-யில் இந்தியர்கள் கேட்ட Top 10 கேள்விகள் என்ன தெரியுமா? title=

புதுடெல்லி: கொரோனா தொற்றின் பாதிப்பால் சிக்கித்தவித்த 2020 ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடையவுள்ளது. 2020-ல் நாம் கண்ட அனைத்து சிக்கல்களும் இந்த ஆண்டுடன் போய்விடும் என நாம் கூற முடியாது என்றாலும், நாம் பெரும்பான்மையான சிக்கலை சந்தித்து விட்டோம் என்பதும் உண்மைதான். கொரோனா தொற்றின் இறுதி கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றுதான் மருத்துவ நிபுனர்கள் கருதுகிறார்கள்.

2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் கூகிளில் அதிகம் கேட்கப்பட்ட முதல் 10 கேள்விகளின் பட்டியலை கூகிள் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் அனைத்து தாக்கங்களையும், கொடுமைகளையும், யதார்த்தங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த கேள்விகள் உள்ளன. இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய தொற்றுநோயை எதிர்கொண்டது.

இதைத் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியைக் கண்டோம். மோடி அரசாங்கத்தின் (Modi Government) சில கொள்கைகள் காரணமாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டன. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒரு மிகப்பெரிய செய்தியானது. இதைத் தொடர்ந்து பல இழிச்செயல்கள் அம்பலமாகின.

2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளின் பட்டியலையும் அவற்றின் விளக்கத்தையும் இங்கே பார்க்கலாம்:

1) கொரோனா வைரஸ் என்றால் என்ன

2020 ஆம் ஆண்டில் கூகிள் தேடல் பட்டியலில் கொரோனா வைரஸின் (Coronavirus) கேள்விகள் முதலிடத்தில் இருந்தன. கொரோனா வைரஸ் என்பது ஒரு வைரஸ் நோயாகும். இது நுரையீரலைப் பாதிக்கிறது. காய்ச்சல் மற்றும் இருமலுடன் சுவாச பிரச்சனையை ஏற்படுத்துகிறது. நோய்த்தொற்றின் முதல் நோயாளி 2019 ஆம் ஆண்டில் சீனாவின் வுஹானில் கண்டறியப்பட்டார். இந்த கொடிய வைரஸ் வெளவால்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. COVID-19 உலகம் முழுவதும் பரவியதால், தொற்றின் சங்கிலியை உடைக்க மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நாடுகள் தற்போது தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன. இதன் விளைவாக வரலாற்றில் மிக மோசமான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2) பினோத் என்றால் என்ன?

பினோத் இந்த ஆண்டு ஆகஸ்டில் இணையத்தில் வைரல் ஆனார். அவரது உண்மையான பெயர் பினோத் தாரு. அவருக்கு YouTube அகௌண்டு உள்ளது. ஆனால் அதில் வீடியோக்கள் இல்லை. அவர், YouTube-ல் பல்வேறு வீடியோக்களைப் பார்ப்பதையும், கமெண்டு பிரிவுக்குச் சென்று ‘பினோத்’ என்று எழுதி கமெண்ட் செய்வதையும் மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு YouTube சேனல் YouTube கமெண்டுகள் எவ்வளவு அர்த்தமற்றவையாக உள்ளன என்பது பற்றிய ஒரு வேடிக்கையான வீடியோவை உருவாக்கியது. அதில் இந்த 'பினோத்' கமெண்டை உதாரணமாகக் காட்டியது. பினோத் ட்விட்டரில் பிரபலமடையத் தொடங்கினார்.

3) பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?

பிளாஸ்மா சிகிச்சை முறை கடுமையாக நோய்வாய்ப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காட்டுகிறது. பிளாஸ்மா சிகிச்சையில், மருத்துவர்கள் ஒரு ஆரோக்கியமான நபரின் இரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை நோயாளிக்கு அளிக்கிறார்கள். கொரோனா வைரஸ் விஷயத்தில், மருத்துவர்கள் குணமடைந்த கோவிட் நோயாளியின் இரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தி அதை நோயாளிகளுக்கு அளித்தனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, COVID-19 இன் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது அறிகுறியற்ற நோயாளிகளில் நோய் எதிர்ப்பு சக்தி ஆரம்ப கட்டத்தில் உருவாகிறது.

4) COVID-19 என்றால் என்ன?

நான்காவது அதிகம் தேடப்பட்ட வினவலான COVID-19, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பால் (WHO) வழங்கப்பட்ட மற்றொரு பெயராகும். 19 என்பது இந்த தொற்றுநோய் முதலில் கண்டறியப்பட்ட ஆண்டைக் குறிக்கும்.

5) குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?

இது 2019 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்றாகும். CAA இன் படி, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31 வரை வந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் உறுப்பினர்கள், அங்கு மத துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். இதனால் முஸ்லிம்கள் தங்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டதாகக் கருதினர். இதுதான் சர்ச்சையின் முக்கிய காரணம். சர்ச்சைக்குரிய சட்டத்தை 2019 ல் நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் நடந்துள்ளன.

6) பெருங்குடல் தொற்று என்றால் என்ன?

பெருங்குடல் தொற்று என்பது பெருங்குடலின் உட்புற புறணி அழற்சியைக் குறிக்கிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், வீக்கம், சோர்வு, எடை இழப்பு போன்ற அறிகுறிகளால் பெருங்குடல் தொற்று வகைப்படுத்தப்படுகிறது. பாலிவுட்டின் மிகவும் விரும்பப்பட்ட நடிகர்களில் ஒருவரான இர்ஃபான் கான் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெருங்குடல் தொற்றுடன் போராடி காலமான பிறகு கூகிள் தேடல்களில் இது அதிகமானது.

7) சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரிய கிரகணம் (Solar Eclipse) என்பது ஒரு வானியல் நிகழ்வு ஆகும். இது சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்லும்போது நிகழ்கிறது. இது ஒளியை மறித்து ஒரு தற்காலிக இருளை உருவாக்குகிறது. 2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 14 (திங்கள்) அன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை உலகம் காணும். இது சுமார் ஐந்து மணி நேரம் நீடிக்கும். 2020 ஆம் ஆண்டின் ஒரே முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் காணப்படும். வானிலை தெளிவாக இருந்தால் சிலி மற்றும் அர்ஜென்டினாவின் சில பகுதிகளில் உள்ளவர்களுக்கும் இது தெரியும்.

ALSO READ: இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை எது தெரியுமா?

8) என்.ஆர்.சி என்றால் என்ன?

எளிமையான வார்த்தைகளில் கூறுவதானால், குடிமக்களின் தேசிய பதிவு (NRC) என்பது சட்டபூர்வமான இந்திய குடிமக்களின் அதிகாரப்பூர்வ பதிவாகும். 2019 ஆம் ஆண்டில் அசாமிற்காக NRC புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி NRC 19,06,657 நபர்களின் பெயர்களை விலக்கியது. 3,30,27,661 விண்ணப்பதாரர்களில் மொத்தம் 3,11,21,004 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதி கட்ட NRC பழங்குடியினரை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை உள்ளடக்கியதாகவும் பல விமர்சனங்கள் எழும்பின.

9) ஹாண்டாவைரஸ் என்றால் என்ன?

இந்த வைரஸ் முக்கியமாக கொறித்துண்ணிகளிலிருந்து பரவுகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. ஹாண்டாவைரஸ் நுரையீரல் நோய்க்குறி என்பது ஹான்டவைரஸ்கள் தொற்றால் ஏற்படும் சுவாச நோயாகும். இது மனிதர்களில் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே ஆபத்தானதாகிறது. பாதிக்கப்பட்ட கொறித்துண்ணியின் சிறுநீர், நீர்த்துளிகள் அல்லது உமிழ்நீரைத் தொட்டு, பின்னர் உங்கள் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொட்டால் மட்டுமே உங்களுக்கு ஹாண்டாவைரஸ் தொற்றுநோயைப் பரவும்.

ALSO READ: 2020-யின் Top ட்வீட்: ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்ஃபி!

10) நெபோடிசம் என்றால் என்ன?

வர்த்தகம், அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, மதம் மற்றும் பிற நடவடிக்கைகள் உட்பட பல்வேறு துறைகளில் செல்வாக்குள்ள ஒருவரின் உறவினர்கள் / நண்பர்களுக்கு ஆதரவாக பாரபட்சம் காட்டப்படுவது நெபோடிசம் (Nepotism) எனப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து நெபோடிசம் விவாதம் இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News