6 லட்சம் ஆதார் அட்டைகளை ரத்து செய்த UIDAI.. காரணம் என்ன?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 6 லட்சம் டூப்ளிகேட் ஆதார் அட்டையை ரத்து செய்தது.  

Written by - RK Spark | Last Updated : Nov 22, 2022, 10:23 AM IST
  • டூப்ளிகேட் ஆதார் எண்ணிக்கை அதிகரிப்பு.
  • குறைக்க அரசு தீவிர முயற்சி.
  • 6 லட்சம் ஆதார் அட்டைகள் ரத்து.
6 லட்சம் ஆதார் அட்டைகளை ரத்து செய்த UIDAI.. காரணம் என்ன? title=

இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை எவ்வளவு முக்கியமானது என்பது நன்கு தெரிந்த ஒன்று, அரசு சம்மந்தமான வேளைகளாக இருந்தாலும் சரி தனியார் சம்மந்தமான வேளைகளாக இருந்தாலும் சரி இதற்கு அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் கேட்கப்படுகிறது.  இந்திய குடிமக்களின் அடையாளமாக மாறிப்போன ஆதார் அட்டை நமது கருவிழி ரேகை, கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களை   கொண்டுள்ளது.  ஆதார் அட்டை முக்கியமானதாக மாறிவிட்டதால் டூப்ளிகேட் ஆதார் அட்டை பெறும் சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  டூப்ளிகேட் ஆதார் அட்டைகள் தொடர்பாக லோக்சபாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் இதுபோன்ற வழக்குகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பதிலளித்து இருக்கிறார்.

மேலும் படிக்க | IRCTC புதிய வசதி! ரயில் பயணத்தின் போது நீங்கள் விரும்பும் உணவுகளை ஆர்டர் செய்யலாம்

தற்போது யூஐடிஏஐ ரத்துசெய்திருக்கும் ஆதார் கார்டுகளின் எண்ணிக்கையை வைத்து அதிகளவில் டூப்ளிகேட் ஆதார் அட்டைகள் எந்த பகுதியில் உருவாக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க முடியும்.  மேலும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், இதுவரையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 598,999 டூப்ளிகேட் ஆதார் அட்டைகளை ரத்து செய்திருப்பதாகவும், டூப்ளிகேட் ஆதார் அட்டைகளை ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் கூறியுள்ளார்.  ஆதார் அட்டைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வழக்குகளை கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அளவில் டூப்ளிகேட் ஆதார் அட்டைகள் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆதார் அட்டை தொடர்பான சேவைகளைக் கோரும் சுமார் ஒரு டஜன் டூப்ளிகேட் இணையதளங்களுக்கு யூஐடிஏஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டூப்ளிகேட் ஆதார் அட்டை தயாரிக்கும் விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதைத் தடுக்க தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  முன்பு ஆதார் அட்டை சரிபார்ப்பிற்கு கைரேகை மற்றும் கருவிழி ரேகை ஸ்கேன் செய்யப்பட்டு வந்தது, இனிமேல் குறிப்பிட்ட நபரின் முகம் சரிபார்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.  மேலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக சுமார் ஒரு லட்சம் ஓய்வூதியதாரர்கள் சரிபார்க்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 2023-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News