வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): மேஷம் முதல் கடகம் வரை

வார ராசிபலன்: ஜூன் 6-ம் தேதி துவங்கும் இந்த வாரத்தில் மேஷம் முதல் கடகம் வரையிலான வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 7, 2022, 01:23 PM IST
  • இளைஞர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
  • உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): மேஷம் முதல் கடகம் வரை  title=

வார ராசிபலன்: ஜூன் 6-ம் தேதி துவங்கும் இந்த வாரத்தில் மேஷம் முதல் கடகம் வரையிலான வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், எனவே தயாராக இருங்கள். தானிய வியாபாரிகள் தங்கள் பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெரிய ஒப்பந்தங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் தரமான பொருட்களை வர்த்தகம் செய்து தொழில் வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளலாம். எனினும் தொழில் சங்கத்தின் செல்வாக்கு இளைஞர்களின் வேலையைப் பாதிக்கும்.

புதிய நண்பர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நீங்கள் குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபட விரும்பினால், உங்கள் அன்புக்குரியவர்களுடன் கலந்துரையாடுங்கள். இதனால் ஒரு தீர்வு கிடைக்கும். கால்சியம் குறைபாடு அல்லது தலைவலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது உறவினர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படலாம்.

மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): சிம்மம் முதல் விருச்சிகம் வரை

ரிஷபம்

இந்த ராசிக்காரர்கள் ஜூன் 9 முதல் தங்கள் வேலையில் அதிக சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். இந்த நேரத்தில் அவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடும். மருந்து வணிகத்தில் முதலீடு செய்ய மிஅக் சாதகமான நேரம் இது. இதற்கிடையில், வணிக வர்க்கம் அரசாங்க ஆவணங்களை உறுதியாக வைத்திருக்க வேண்டும் மற்றும் பண பரிவர்த்தனையில் ஆவண வேலைகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

எழுத்தாளர்களாக முயற்சிக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், அவர்களின் கட்டுரைகளை செய்தித்தாள் அல்லது பத்திரிகையில் வெளியிடலாம். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இல்லையெனில் தகராறு அதிகரிக்கும். பழைய விஷயங்களை மறக்க முயற்சி செய்யுங்கள். நெஞ்சு எரிச்சல் போன்ற அசிடிட்டி பிரச்சனை இருக்கும். தானியங்களை உட்கொள்வது நன்மை பயக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மீது நம்பிக்கை வைத்திருங்கள். நம்பிக்கை இருந்தால் மட்டுமே வாழ்க்கை என்ற சக்கரம் தொடர்ந்து தடையில்லாமல் முன்னேறிச் செல்லும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி 2022: மேஷத்தில் பெயர்ச்சி; யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் பணி மற்றும் குழுவிற்கு நல்ல வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக நிறுவனத்தில் பாராட்டுகளைப் பெறுவார்கள். இந்த வேகத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள். எலக்ட்ரானிக் பொருட்களின் வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வணிகம் இந்த வாரம் மிக வேகமாக வளரும். எனினும் நண்பர்களுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும். அத்தகைய சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

அன்புக்குரியவர்களின் பேச்சுக்களை சுயமரியாதையுடன் தொடர்புபடுத்தப்படக்கூடாது. குறிப்பாக வாரத்தின் தொடக்கத்தில் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதய நோயாளிகள் கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்க வேண்டும், இந்த முறை இதய நோய் பிரச்சனை உங்கள் கவனக்குறைவால் தான் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்கள் தொடர்பு நன்மை தரும், சமூக அக்கறையுடன் செயல்படுவீர்கள். உங்கள் நெட்வொர்க்கை ஆக்டிவ் ஆக வைத்திருக்க வேண்டிய நேரம் இது.

மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): தனுசு முதல் மீனம் வரை

கடகம் 

 இந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் வருத்தப்படலாம். வணிகர்கள் மன வருத்தத்தினால் பாதிக்கப்படலாம். தனிமையாகவும் உணரலாம், நண்பர்களைச் சந்தித்து பேசலாம். அது உங்களுக்கு ஆறுதலைத் தரும். இளைஞர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் ஏற்படும் தீ விபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துங்கள். சிறிய நோய்கள் விஷயத்தில் கூட எச்சரிக்கையாக இருப்பது நல்லது, காயம் அல்லது தொற்று இருந்தால், நிச்சயமாக மருத்துவரை அணுகவும். அதிகப்படியாக செலவு செய்வதை தவிர்த்து, தேவையான இடங்களில் மட்டும் செலவு செய்யுங்கள். தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி; அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News