Weekly Horoscope: ஆகஸ்ட் மாத இறுதியில் ‘இந்த’ ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்க போகுது!

Weekly Horoscope: தின ராசி பலனைப் போலவே வார ராசி பலன்களும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 29, 2022, 07:30 AM IST
  • குடும்ப உறுப்பினர்களுடம் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள்.
  • நிதி பரிவர்த்தனை செய்ய தற்போது சாதகமான நேரம்.
  • புதிய வாகனம் அல்லது வீடு கிடைக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
Weekly Horoscope: ஆகஸ்ட் மாத இறுதியில் ‘இந்த’ ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்க போகுது! title=

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். தின ராசி பலனைப் போலவே வார ராசி பலன்களும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக அமையப் போகிறது. ஆகஸ்ட் கடைசி வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்:

வேலையில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காலம். உங்கள் பணிகளிலும் முயற்சிகளிலும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகங்களும் உண்டாகி தடைபட்ட திருமணம் கை கூடும். 

மிதுனம்:

பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திடீர் பண வரவையும் எதிர்பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்களுடம் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். நிதி பரிவர்த்தனை செய்ய தற்போது சாதகமான நேரம். புதிய வாகனம் அல்லது வீடு கிடைக்கும் வாய்ப்பும் உண்டாகும். எனினும், பணியிடத்தில் அனைவரையும் நம்புவதைத் தவிர்க்கவும். சிறிது எச்சரிக்கையாக இருக்கவும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும்.

மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

விருச்சிக ராசி:

வேலையில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். ஆன்மிகம் மற்றும் சமய நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

மீனம்: 

தொழில் துறையில் இருப்பவர்கள் வெற்றியை ருசிப்பார்கள். சிறப்பான பங்களிப்பிற்காகவும், பணித்திறமைக்காகவும் எல்லோரும் உங்களைப் புகழ்வார்கள். இந்த நேரத்தில் அதிக பணம் செலவழிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு நல்ல நேரம். திருமண வாழ்வில் இனிமை இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News