Digital signature certificate என்றால் என்ன? எப்படி பெறுவது? என்ன முக்கியத்துவம்?

வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்கு மின்னஞ்சல் தொடர்பு மூலம் ஒரு தகவலை அளித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட வருமான வரித் துறை இணையதளத்தில் தங்கள் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (DSC) மீண்டும் பதிவு செய்யுமாறு இதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 9, 2021, 02:35 PM IST
  • டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்கள் காகிதத்தால் ஆன நிஜ சான்றிதழ்களுக்கு சமமான டிஜிட்டல் மாற்றாகும்.
  • ஒரு நபர் சான்றளிக்கும் அதிகாரியிடமிருந்து DSC பெற மூன்று முக்கிய வழிகள் உள்ளன.
  • புதிதாக தொடங்கப்பட்ட வருமான வரி இணையதளத்தில் வரி செலுத்துவோர் தங்கள் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
Digital signature certificate என்றால் என்ன? எப்படி பெறுவது? என்ன முக்கியத்துவம்?  title=

Digital Signature Certificates (DSC): டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்கள் (DSC) காகிதத்தால் ஆன நிஜ சான்றிதழ்களுக்கு சமமான டிஜிட்டல் மாற்று அல்லது மின்னணு வடிவ சான்றிதழ்களாகும். 

ஓட்டுநர் உரிமங்கள், பாஸ்போர்ட் அல்லது உறுப்பினர் அட்டைகள் போன்ற, காகிதத்தால் ஆன நிஜ சான்றிதழ்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு நபரின் அடையாளத்திற்கான சான்றாக செயல்படுகின்றன. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நாட்டில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டக்கூடிய ஒருவரது அங்கீகாரத்தை ஓட்டுநர் உரிமம் அடையாளம் காட்டுகிறது. அதேபோல், ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க, இணையத்தில் தகவல் அல்லது சேவைகளை அணுக அல்லது சில ஆவணங்களை டிஜிட்டல் முறையில் கையொப்பமிட டிஜிட்டல் சான்றிதழை மின்னணு முறையில் வழங்க முடியும்.

டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்களின் தேவை என்ன?

ஃபிசிக்கல் ஆவணங்கள் எனப்படும் காகிதத்தால் ஆன நிஜ ஆவணங்கள் கையால் கையொப்பமிடப்படுகின்றன. மின் படிவங்கள் போன்ற மின்னணு ஆவணங்களில் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட வேண்டும். இந்த இடங்களில் இவற்றின் பயன்பாடு உள்ளது. 

சான்றளிக்கும் அதிகாரியிடமிருந்து டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை எவ்வாறு பெறுவது?

ஒரு நபர் சான்றளிக்கும் அதிகாரியிடமிருந்து DSC பெற மூன்று முக்கிய வழிகள் உள்ளன.

- டிஜிட்டல் கையொப்ப சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அசல் துணை ஆவணங்களுடன் சான்றளிக்கும் அதிகாரிகளை (CA-க்கள்) நேரடியாக அணுகலாம். இந்த இடங்களில் சுய சான்றளிக்கப்பட்ட பிரதிகள் (self-attested copies ) போதுமானதாக இருக்கும். உரிமம் பெற்ற CA (இந்திய ஐடி-சட்டம் 2000 இன் பிரிவு 24 இன் கீழ் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை வழங்க உரிமம் வழங்கப்பட்டவர்) டிஜிட்டல் கையொப்பத்தை வழங்குவார்.

ALSO READ: ITR தாக்கல்: நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு வரி செலுத்தலில் வட்டிக்கான சலுகை உண்டா?

- ஆதார் eKYC அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, CA இவற்றை வழங்கும் இடங்களிலும் DSC-களை பெறலாம். இப்படி பெறும்போது துணை ஆவணங்கள் தேவையில்லை.

- DSC விண்ணப்பதாரரின் தகவல்களை வங்கி தரவுத்தளத்தில் வைத்திருக்கும் ஒரு வங்கி வழங்கிய கடிதம் / சான்றிதழ் ஆகியவையும் இதில் ஏற்கப்படும். எனினும், அத்தகைய கடிதம் அல்லது சான்றிதழை வங்கி மேலாளர் சான்றளிக்க வேண்டும்.

வருமான வரித்துறை (Income Tax Department) வரி செலுத்துவோருக்கு மின்னஞ்சல் தொடர்பு மூலம் ஒரு தகவலை அளித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட வருமான வரித் துறை இணையதளத்தில் தங்கள் டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (DSC) மீண்டும் பதிவு செய்யுமாறு இதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களால இருந்த http://incometaxindiaefiling.Gov.In என்ற வருமான வரி வலைத்தளத்திற்கு (Income Tax website) பதிலாக இப்போது புதிய வலைத்தளமான URL http://incometax.Gov.In இயக்கத்தில் உள்ளது. இது ஜூன் 7 ஆம் தேதி இரவு 8:45 மணிக்கு இயங்கத்  துவங்கியது. 

“அன்புள்ள வரி செலுத்துவோர், ஜூன் 7 முதல் புதிய மின்-தாக்கல் போர்டல் www.incometax.gov.in இல் உங்கள் தற்போதைய செல்லுபடியாகும் DSC-யை மீண்டும் பதிவுசெய்வதை உறுதிசெய்ய வேண்டும். சில பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக பழைய போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டிருந்த முந்தைய டிஜிட்டல் கையொப்பத்தை (DSC) புதிய தளத்தில் இடம்பெயர வைக்க முடியாது” என்று வரி செலுத்துவோருக்கு வந்துள்ள தகவல் தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: FY 2020-21 வருமான வரி தாக்கல்: ITR படிவங்களில் ஏற்பட்டுள்ளன சிறிய மாற்றங்கள், விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News