Income Tax புதிய வலைத்தளம் செயலிழந்தது: விரைவில் சரி செய்ய Infosys-க்கு உத்தரவு

வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் புதிய வலைத்தளம் செயலிழந்தது தொடர்பாக மக்களிடமிருந்து புகார்கள் வந்ததை அடுத்து, நிதியமைச்சர் நேரடியாக இன்போசிஸ் நிறுவனத்தை சாடியுள்ளார். இன்போசிஸ் இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது. அதைப் பராமரிக்கும் பொறுப்பும் இன்போசிஸ் நிறுவனத்தினுடையது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 8, 2021, 04:33 PM IST
  • வருமான வரியின் புதிய வலைத்தளம் செயலிழந்தது.
  • புதிய வலைத்தளம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
  • விரைவில் போர்ட்டலைத் தவிர, வரி செலுத்துவோருக்கு ஒரு மொபைல் செயலியும் வழங்கப்படும்.
Income Tax புதிய வலைத்தளம் செயலிழந்தது: விரைவில் சரி செய்ய Infosys-க்கு உத்தரவு title=

Income Tax Portal Crashed: வருமான வரி தாக்கலுக்கான புதிய வலைத்தளம் தொடர்பாக மக்கள் புகார்களை அளித்து வருகின்றனர். இந்த வலைத்தளம் திறக்கவில்லை என்று பலர் ட்விட்டரில் எழுதியுள்ளனர். பலர் இந்த புகாரை நேரடியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துச் சென்றுள்ளனர். நேற்று அதாவது ஜூன் 7 ஆம் தேதி வருமான வரியின் புதிய இ-போர்டல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

வருமான வரியின் புதிய வலைத்தளம் செயலிழந்தது, நிதியமைச்சர் கூறியது என்ன? 

வலைத்தளம் கிரேஷ் ஆனது தொடர்பாக மக்களிடமிருந்து புகார்கள் வந்ததை அடுத்து, நிதியமைச்சர் (Finance Minister) நேரடியாக இன்போசிஸ் நிறுவனத்தை சாடியுள்ளார். இன்போசிஸ் இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது. அதைப் பராமரிக்கும் பொறுப்பும் இன்போசிஸ் நிறுவனத்தினுடையது. 

'நேற்று இரவு 20:45 மணிக்கு e-filing portal 2.0 தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எனக்கு பல புகார்கள் வந்துள்ளன. என்னுடைய டைம்லைனில் மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இன்போசிஸ் மற்றும் நந்தன் நிலேகனி வரி செலுத்துவோரை சேவைகளின் தரத்தில் ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்புகிறேன். வரி செலுத்துவோருக்கான எளிதான செயல்முறையே எங்கள் முன்னுரிமையாகும்.' என்று எழுதிய நிர்மலா சீதாராமன் இந்த ட்வீட்டில் நந்தன் நிலேகானி மற்றும் இன்போசிஸ்ஸை டேக் செய்துள்ளார். 

வரி செலுத்துவோரின் வெவ்வேறு பிரிவுகள்

வருமான வரியின் புதிய இணையதளத்தில் (Income Tax New Portal) , ஒவ்வொரு வரி செலுத்துவோரின் வகையும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தனிநபருக்கு ஒரு தனி வகை உள்ளது, நிறுவனம், நிறுவனம் அல்லாத மற்றும் வரி வல்லுநர்களுக்கு ஒரு தனி வகை உள்ளது. வரி செலுத்துவோருக்கு, இந்த தளத்தின் டிராப் டவுன் மெனுவில் ஐ.டி.ஆர் தாக்கல், பணத்தைத் திரும்பப்பெறும் நிலை (Refund Status) மற்றும் வரி வரம்பு தொடர்பான வழிமுறைகள் உள்ளன.

ALSO READ:வருமான வரியை தாக்கலுக்கு புதிய இணையதளம்; முக்கிய அம்சங்கள் பிற விபரம்

இ-போர்ட்டலைப் புரிந்துகொள்வது எளிது

இ-ஃபைலிங் போர்ட்டலில் 846 கோடிக்கும் அதிகமான தனிப்பட்ட பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். மதிப்பீட்டு ஆண்டு 2020-21 (2019-20 நிதியாண்டு) க்கு 3.13 கோடிக்கும் அதிகமான ஐ.டி.ஆர்-கள் இ-வெரிபை செய்யப்பட்டன. புதிய போர்ட்டலில் பயனர் மானுவல், FAQ-க்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. இதன் மூலம் வரி செலுத்துவோர் வலைத்தளத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இது தவிர, சாட்போட் (Chatbot) மற்றும் ஹெல்ப்லைன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

Pre-filled ITR-களுக்கு ப்ரொஃபைலை புதுப்பிக்கவும்

பதிவுசெய்யப்பட்ட பயனர் இந்த மின்-போர்ட்டலில் லாக் இன் செய்து, இ-பிராசசிங், ரெஸ்பான்ஸ் டு அவுட்சோர்சிங் டிமாண்ட் மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவற்றையும் pending actions டேப்பில் காணலாம். இதனுடன், வரி செலுத்துவோர் (Tax Payers) எந்த விவரங்களை இன்னும் நிரப்பவில்லை என்பதையும் போர்டல் உங்களுக்குக் கூறும். இதை அறிந்துகொண்டு நீங்கள் உங்கள் ப்ரொஃபைலை பூர்த்தி செய்ய முடியும். வரி செலுத்துவோர் தங்கள் சுயவிவரங்களை புதுப்பிக்குமாறு தகவல் தொழில்நுட்பத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் துல்லியமான ப்ரீ-ஃபில்ட் ஐ.டி.ஆர்-கள் அவர்களுக்கு கிடைக்கும். இதனால் அவரது வரி தாக்கல் அனுபவமும் மேம்படும். விரைவில், போர்ட்டலைத் தவிர, வரி செலுத்துவோருக்கு ஒரு மொபைல் செயலியும் வழங்கப்படும், இந்த செயலியில் போர்ட்டலில் உள்ள அனைத்து சேவைகளும் இருக்கும்.

ALSO READ: ITR தாக்கல்: நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு வரி செலுத்தலில் வட்டிக்கான சலுகை உண்டா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News