கமலில் "விக்ரம்" படத்தில் இருந்து நடிகர் ராகவா லாரன்ஸ் விலகல்? எனத் தகவல்

"விக்ரம்" (Vikram) படத்தில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடிக்க இருந்தார். ஆனால் இப்போது பல்வேறு காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2021, 05:53 PM IST
கமலில் "விக்ரம்" படத்தில் இருந்து நடிகர் ராகவா லாரன்ஸ் விலகல்? எனத் தகவல்  title=

சினிமா செய்திகள்: விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெகா-பிளாக்பஸ்டர் "மாஸ்டர்" (Master) படத்தை இயக்கிய பின்னர், லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமான கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "விக்ரம்" படத்தை இயக்குவார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கமல் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்ததை அடுத்து, சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு, அவரின் அடுத்த படமான "விக்ரம்" மீது கவனத்தை செலுத்த உள்ளார். அடுத்த இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, "விக்ரம்" (Vikram) படத்தில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடிக்க இருந்தார். ஆனால் இப்போது பல்வேறு காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

ALSO READ | 22 ஆண்டுகளுக்குப்பிறகு கமல்ஹாசனுடன் இணையும் பிரபலம்!

"விக்ரம்" படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருந்த கதாபாத்திரத்திற்காக, படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி அல்லது விஷாலுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல்கள் கூறுகிறது.

அதேநேரத்தில் "பாகுபலி" படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இணைய உள்ளார் எனக் கூறப்படுகிறது.  இவர்கள் இணைத்து பணியாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருவேளை இவர்களின் கூட்டணி இறுதியானால், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள "விக்ரம்" படத்தை முடித்த பிறகு, பிரபாஸ் உடன் லோகேஷ் கனகராஜ் எனத் தெரிகிறது. தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் "சலார்" எனும் படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News