22 ஆண்டுகளுக்குப்பிறகு கமல்ஹாசனுடன் இணையும் பிரபலம்!

22 ஆண்டுகளுக்குப்பிறகு ‘விக்ரம்’ படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் பிரபல நடன இயக்குனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 29, 2020, 08:57 AM IST
22 ஆண்டுகளுக்குப்பிறகு கமல்ஹாசனுடன் இணையும் பிரபலம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கமல்ஹாசனின் அடுத்த படம் 'விக்ரம்'. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்தப் படத்துக்கு ‘விக்ரம்’ (Vikram) என அறிவித்துப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்புக்கான டீஸரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. 

ALSO READ | விஜயின் மாஸ்டர் படம் குறித்து புதிய அப்டேட் என்ன தெரியுமா?

இந்நிலையில் தற்போது கமல்ஹாசனுடன் மிக முக்கியமானக் கதாபாத்திரத்தில் பிரபுதேவா (Prabhu Deva) நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1998-ல் இருவரும் சேர்ந்து நடித்த ‘காதலா காதலா’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப் படத்துக்குப்பிறகு கமல்ஹாசனுடன், பிரபுதேவா இணைந்து பணியாற்றவில்லை. 

தற்போது 22 ஆண்டுகளுக்குப்பிறகு ‘விக்ரம்’ படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கயிருக்கிறார் பிரபுதேவா. இதற்கிடையில் படப்பிடிப்பு நிறைவடையவே மே - ஜூன் ஆகிவிடும் என்பதால் 'விக்ரம்' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திட்டமிடப்படும் எனத் தெரிகிறது.

ALSO READ | லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘கமல்ஹாசன் 232’ மோஷன் போஸ்டர்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News