ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?

Rajinikanth Biopic Movie : நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஹீரோவாக நடிக்க இருப்பது யார்?   

Written by - Yuvashree | Last Updated : May 2, 2024, 10:41 AM IST
  • ரஜினிகாந்தின் பயோபிக்
  • யார் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும்?
  • அட..இவரா?
ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?  title=

Rajinikanth Biopic Movie : தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, இந்திய திரையுலகிற்கே டாப் நடிகராக விளங்குபவர், ரஜினிகாந்த். சுமார் அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பெற்ற இவர், இப்போதும் பல கோடி ரசிகர்களை உலகம் முழுவதும் வைத்திருக்கிறார். இந்த நிலையில், இவரது வாழ்க்கை ஒரு திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. 

50 ஆண்டுகால சகாப்தம்:

அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து அறிமுகமான ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் என்பதும், அவர் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த கதை. அவர் திரையுலகிற்குள் நுழைவதற்கு எந்த அளவிற்கு சிரமப்பட்டார் என்பதையும், வந்த பிறகு என்ன கஷ்டங்களை எதிர்கொண்டார் என்பதையும் அவரே கூற, பல நேர்காணல்களிலும் மேடை விழாக்களிலும் கேட்டிருப்போம். ஆனால், அதையே ஒரு திரைப்படமாக பார்த்தால் எப்படியிருக்கும்? 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள குரங்கு பெடல் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

எந்த நடிகர் சரியாக இருப்பார்? 

வில்லத்தனம், ஹீரோயிசம், காமெடி கலந்த நாயகன் என தமிழ் சினிமாவில் பல்வேறு முகங்களை காண்பித்த ரஜினிகாந்தை அப்படியே சினிமாவில் காண்பிப்பது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. கொஞ்சம் எசகு பிசகு ஆனாலும், எந்த நடிகர் ரஜினியாக நடித்தாரோ அந்த நடிகரை ரசிகர்கள் அடுத்து எந்த படத்திலும் அங்கீகரிக்காத நிலை கூட ஏற்படலாம். இந்த நிலையில், ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படம் குறித்த பேச்சு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அடிப்பட்டு வருகிறது. 

இது குறித்து பேச்சு எழுவதற்கு காரணம், நடிகர் தனுஷ். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் இளையராஜாவாக நடிக்கும் இவர், தனக்கு ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், ரஜினி-தனுஷின் உறவை சற்று திரும்பி பார்த்தால் அது நடக்காது என்றே தோன்றுகிறது. இதையடுத்து, ரசிர்கள் பலர் ட்விட்டரில் யார் ரஜினியாக நடித்தால் சரியாக இருக்கும் என்று விவாதம் செய்தனர். இதில், பெரும்பாலானோர் தனுஷின் பெயரை கூற, ஒரு சிலர் சிவகார்த்திகேயன் மற்றும் கவின் என கூறி வருகின்றனர். 
‘இவர்’ சரியாக இருப்பாரா? 

Manikandan

ரஜினிகாந்தின் கதாப்பாத்திரத்தில் நடிக்க பல பெரிய நடிகர்களின் பெயர்களை ரசிகர்கள் பரிந்துரைத்தாலும், இன்னும் சிலர் தற்போது வளர்ந்து வரும் ஒரு நடிகரின் பெயரை கூறுகின்றனர். அவர்தான், மணிகண்டன். இவர், ஏற்கனவே காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்கள் சமீப காலங்களில் ஹிட் அடித்தன. இன்றைய இளைஞர்கள் மட்டுமன்றி, பெரியவர்களுக்கு கூட இவரை பிடித்திருக்கிறது. இதனால், இவர் ரஜினியாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் படிக்க | பிரபல பின்னணி பாடகி காலமானார்! இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News