பிரபல பின்னணி பாடகி காலமானார்! இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்..

Latest News Uma Ramanan Death : பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். ஆனந்த ராகம் பாடலை பாடி பிரபலமான இவரது உயிரிழப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : May 2, 2024, 08:46 AM IST
  • பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
  • இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்
  • இவருக்கு 69 வயதாகியிருந்தது
பிரபல பின்னணி பாடகி காலமானார்! இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்.. title=

Latest News Uma Ramanan Death : தமிழ் திரையுலகின் பிரபலமான பல பாடல்களை பாடியவர், உமா ரமணன். இவருக்கு 72 வயதான நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இவரது மறைவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறது. 

இளையராஜாவிடம் பல பாடல்களில் பணிபுரிந்தவர்..

தமிழ் திரையுலக இசையமைப்பாளர் இளையராஜாவின் பல பாடல்களை பாடியவர், உமா ரமணன். சுமார் 35 ஆண்டு காலங்களாக கோலிவுட் திரையுலகில் இருக்கும் இவர், பல பிரபலமான பாடல்களை பாடியிருக்கிறார். எந்தவொரு மறைமுக கலைஞரும் உயிரிழந்த பின்புதான் ரசிகர்களுக்கு அவர்கள் குறித்தே தெரிய வரும். அந்த வகையில், இவரது பாடல்கள் பலவற்றை நாம் கேட்டிருந்தாலும், இவர்தான் அந்த குயில் போன்ற குரலுக்கு சொந்தக்காரர் என்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. 

இளையராஜாவின் இசையில் உருவான நிழல்கள், மூடுபனி, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல படங்களில் இவர் பாடல்களை பாட்யிருக்கிறார். குறிப்பாக, பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஆனந்த ராகம்’ பாடல் இவருக்கு பெரும் பெருமையை தேடி தந்தது. 1980ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது இசைப்பயணம், இளையராஜாவில் தொடங்கி இளையராஜாவுடனே முடிந்திருக்கிறது. எண்ணற்ற பாடல்களை பாடியதோடு மட்டுமன்றி, 6000த்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியிருக்கிறார். 

உயிரிழந்தது எப்படி? 

உமா ரமணன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இவரது மகன், விக்ணேஷ் ரமனணும் பாடகர்தான். கடந்த சில நாட்களாகவே உமா, உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், இவர் நேற்று (மே 1) இரவு உயிரிழந்திருக்கிறார். 

திரைப்பயணத்தை ஆரம்பித்தது எப்படி? 

உமா ரமணி, சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்துள்ளார். இவரை பார்த்த அப்போதைய பிரபலம் ஒருவர், ஒரு இந்தி படத்தில் இவருக்கு பாடல் பாட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதையடுத்து தமிழிலிலும் இவருக்கு பாடல்கள் பாட பல்வேறு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. 

இளையராஜா, இதுவரை பல்வேறு பின்னணி இசை கலைஞர்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அப்படி, அவர் அறிமுகம் செய்து வைத்து பல நாட்கள் திரை துறையில் இருந்த ஒரு பாடகிதான், உமா ரமணன். பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் இளையராஜாவின் இசைக்கு கீழ்தான் பாடியிருக்கிறார். 

மேலும் படிக்க | அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

கணவரும் பாடகர்..

பாடகி உமா ரமணனின் கணவரும் பாடகர்தான். அவரது பெயர், ஏ.வி.ரமணன். இவர் இந்தியில் பல பிரபலமான பாடல்களை பாடியிருக்கிறார். மேடை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாடல் பாடிய இவர்கள், வாழ்க்கை துணையாக பின்னாளில் மாறிவிட்டனர். இருவரும் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது, தாங்கள் இணைந்து பல்வேறு பாடல்களை பாடியிருந்தாலும் தங்களால் ஒன்றாக இளையராஜாவின் இசையில் பாட முடியவில்லை என்று கூறியிருக்கின்றனர். 

சூப்பர் ஹிட் அடித்த பாடல்கள்:

>ஆனந்த ராகம்-பன்னீர் புஷ்பங்கள்
>அமுதே தமிழே-கோவில் புறா
>கஸ்தூரி மானே-புதுமை பெண்
>நீ பாதி நான் பாதி பெண்ணே-கேளடி கண்மனி
>ஆகாய வெண்ணிலாவே-அரங்கேற்ற வேலை
>வெள்ளி நிலவே-நந்தவன தேர்

உமா ரமணனின் மறைவையொட்டி, தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும், அவரது குரலின் ரசிகர்களும் இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: தியேட்டரை கொளுத்திய அஜித் ரசிகர்கள்... தீனா வெளியீட்டில் அட்டகாசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News