ரஜினிகாந்த் படத்தில் வைகைப் புயல் - கலக்கும் நெல்சன் திலீப்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் வைகைப்புயல் நடிக்க உள்ளாராம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2022, 01:56 PM IST
  • ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்
  • சூப்பர் ஸ்டாரின் 169வது படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்
  • முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வைகைப்புயல் வடிவேலு
 ரஜினிகாந்த் படத்தில் வைகைப் புயல் - கலக்கும் நெல்சன் திலீப்குமார் title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படத்தை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். கோலிவுட்டில் ‘கோலமாவு கோகிலா’  மூலம் காலடி எடுத்து வைத்த இயக்குநர் நெல்சனுக்கு, அந்தப் படம் மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. வசூல் ரீதியாகவும் ஹிட்டானதால், அடுத்த படத்தில் தனது நண்பரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார்.

மேலும் படிக்க | இயக்குநராக களமிறங்கும் யுவன் - ஹீரோ கிடையாது...!

இந்தப் படம் இருவருக்குமான சினிமா கிராஃபை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே வெளியான டாக்டர், வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, சிவகார்த்திகேயனை 100 கோடி கிளப்பில் கொண்டுபோய் சேர்த்தது. இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு, இளைய தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குகிறார் நெல்சன். ரஜினிகாந்தின் 169வது படமான இப்படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியானது. பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அனிரூத் இசையமைக்கிறார். இந்நிலையில். இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வைகைப் புயல் வடிவேலு இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம். 

மேலும் படிக்க | ரஜினிகாந்த் - நெல்சன் புதிய படம்! சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News