படிப்புங்குறது பிரசாதம் மாதிரி - வெளியானது வாத்தி டீசர்

தனுஷ் நடிக்கும் பைலிங்குவல் படமான வாத்தி படத்தின் டீசர் அவரது பிறந்தநாளையொட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 28, 2022, 07:30 PM IST
  • தனுஷுக்கு இன்று 40ஆவது பிறந்தநாள்
  • அதனையொட்டி வாத்தி படத்தின் டீசர் வெளியானது
  • வெங்கி அட்லூரி படத்தை இயக்கியிருக்கிறார்
 படிப்புங்குறது பிரசாதம் மாதிரி - வெளியானது வாத்தி டீசர் title=

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து பாலிவுட் சென்ற தனுஷ் அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டினார். இதனையடுத்து அவர் பாலிவுட்டிலும் கவனிக்க்கூடிய நடிகராக மாறினார். அதனைத் தொடர்ந்து ஹாலிவுட்டுக்கும் சென்று அங்கு தன் முத்திரையை பதிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹாலிவுட்டில் அவர் நடித்த தி க்ரே மேன் படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Dhanush

இந்தச் சூழலில் தனஷ் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. மேலும் பலரும் தனுஷுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர்.

 

இதற்கிடையே தனுஷ் தமிழில் திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் பைலிங்குவல் படமான வாத்தி படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் ஆசிரியராக தோற்றமளிக்கும் தனுஷின் கெட்டப்பும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | பாலிவுட்டை ஆளும் தென்னிந்திய படங்கள்! காரணம் அடுக்கும் அனுராக் காஷ்யப்

இந்தப் படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. அதேபோல் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் நானே வருவே படமும் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தனுஷுக்காக பிரசன்னா வெளியிட்ட வைரல் வீடியோ

மேலும் படிக்க | Samantha-Rashmika: சமந்தா-ரஷ்மிகா: ராஷ்மிகா, சமந்தா இடையே போட்டி!

மேலும் படிக்க | பாலிவுட்டை ஆளும் தென்னிந்திய படங்கள்! காரணம் அடுக்கும் அனுராக் காஷ்யப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News