Samantha-Rashmika: சமந்தா-ரஷ்மிகா இடையே பனிப்போர்

சமந்தா மற்றும் ராஷ்மிகாவுக்கும் இடையே பாலிவுட்டில் போட்டிப் போடத் தொடங்கியுள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 28, 2022, 06:09 PM IST
  • சமந்தா - ராஷ்மிகா இடையே போட்டி
  • பாலிவுட்டில் முந்தப்போவது யார்?
  • அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகும் ராஷ்மிகா
Samantha-Rashmika: சமந்தா-ரஷ்மிகா இடையே பனிப்போர் title=

Samantha-Rashmika: பிரபலமான தென்னிந்திய நடிகைகளான சமந்தா மற்றும் ராஷ்மிகா இருவரும் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து இப்போதைய டிரெண்டிங்கில் முன்னணியில் உள்ளனர். திருமணத்தால் முக்கிய படங்களில் நடிக்காமல் இருந்த சமந்தா, விவகாரத்துக்குப் பிறகு கிளர்ந்தெழுந்துவிட்டார். தன்னுடைய பழைய மார்க்கெட்டைப் பிடிக்க தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையில் ரவுண்ட் அப் வந்த அவர், அடுத்த அதிரடியாக பாலிவுட்டுக்கு என்டிரி கொடுத்துள்ளார். அதேபோல், ராஷ்மிகா மந்தனாவும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாக படம் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | ஏகே அஜித் என்ட்ரி.... திருவிழாக்கோலம் ஆன திருச்சி

அல்லு அர்ஜூனுடன் அவர் நடித்த புஷ்பா படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால் அவருடைய மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தமிழில் இளைய தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு தேடிச் சென்றது. இப்போது வாரசு படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு பாலிவுட்டில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. அங்கு 3 படங்களில் நடிக்க இருக்கிறாராம். தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகைகளாக இருந்த சமந்தாவும், ராஷ்மிகாவும் பாலிவுட்டுக்கு சென்றிருப்பது ரசிகர்களிடையே புருவத்தை உயரச் செய்திருக்கும் நிலையில், அங்கு தங்களுடைய மார்க்கெட் மற்றும் பிரபலத்தை தக்க வைப்பதில் இருவருக்கும் இடையே போட்டி உருவாகியிருக்கிறதாம்.

இந்தப் போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என்பது அவரவர் நடிக்கும் படங்கள் வெளியான பின்னரே தெரியவரும். இப்போதைக்கு பெரிய பட்ஜெட் படங்களில் கமிட்டாவதிலேயே சமந்தாவுக்கும், ராஷ்மிகாவுக்கும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இது எங்குபோய் முடியுமோ? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். அண்மையில், சமந்தா காபி வித் கரண் நிகழ்ச்சியில் அக்ஷய்குமாருடன் சமந்தா கலந்து கொண்டார். அப்போது, பல சுவாரஸ்யமான செய்திகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். மேலும், தன்னுடைய பாலிவுட் பிரவேசத்தையும் அந்த பேட்டியில் கூறினார்.  

மேலும் படிக்க | விஜய் சேதுபதியின் ரியல் ’ஜானு’ குறித்த சுவாரஸ்ய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News