பிக்பாஸ் 6: இந்த தடவை நடத்தப்போறது சமந்தா?! - ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

5 சீசன்கள் இதுவரை நடந்து முடிந்துள்ள நிலையில் பிக்பாஸ் 6ஆவது சீசனை நடிகை சமந்தா நடத்தவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 2, 2022, 06:43 PM IST
  • தமிழ் பிக்பாஸின் முதல் 5 சீசன்களை கமல் நடத்தியுள்ளார்
  • 6ஆவது சீசனை யார் நடத்தப்போவது என கேள்வி எழுந்துள்ளது
  • தெலுங்கு பிக்பாஸை சமந்தா நடத்தவுள்ளதாகத் தகவல்
பிக்பாஸ் 6: இந்த தடவை நடத்தப்போறது சமந்தா?! - ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி! title=

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நடந்து முடிந்துள்ள 5 சீசன்களையும் கமல்தான் நடத்தினார். 

இதனிடையே ஓடிடியில் மட்டும் ஒளிபரப்பாகும் வண்ணம் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டது. இதையும் தொடக்கத்தில் கமல்தான் நடத்திவந்தார். பின்னர் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அவர் அதைத் தொடரமுடியாமல் போனது. இதையடுத்து பலரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் சிம்பு அதைத் தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸின் 6ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதனை வழக்கம்போல கமலே நடத்துவாரா அல்லது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளாரா அல்லது வேறு யாரும் நடத்துவார்களா எனும் எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

தமிழ் பிக்பாசின் கதை சென்றுகொண்டிருக்கும் நிலையில், தெலுங்கு பிக்பாஸ் பற்றி புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, நடிகர் நாகர்ஜுனா தனது படங்களில் பிஸியாக உள்ளதால் அடுத்த பிக்பாஸ் சீசனை அவரால் நடத்த முடியாத சூழல் உள்ளதாம்.

மேலும் படிக்க | ‘விஜய்-68’ படத்தை இயக்கும் சிறுத்தை சிவா?!- ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் தகவல்!

 

இதனால் அவருக்குப் பதிலாக தெலுங்கு பிக்பாஸை இம்முறை நடிகை சமந்தா நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துவரும் சமந்தா தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்களும் நல்ல கவனத்தைப் பெறுகின்றன.

இதனால்தான் பிக்பாஸை நடத்த சமந்தாவைத் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமந்தாவுடன் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அட்லி இயக்கும் ஷாருக்கான் படம் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ படத்தின் காப்பியா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News