'கேஜிஎஃப்-2' ஒரு திகில் படம் என்று கூறிய சர்ச்சை இயக்குனர்!

'கேஜிஎஃப்-2' ஒரு கேங்ஸ்டர் படம் மட்டுமல்ல, இது பாலிவுட் துறைக்கு ஒரு திகில் படம் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா.  

Written by - RK Spark | Last Updated : Apr 15, 2022, 10:16 PM IST
  • கேஜிஎஃப்-2 முதல் நாளில் வசூல் சாதனை படைத்துள்ளது.
  • மற்ற மாநிலங்களில் வசூல் வாரி குவித்து வருகிறது.
  • பாலிவுட்டிலும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
'கேஜிஎஃப்-2' ஒரு திகில் படம் என்று கூறிய சர்ச்சை இயக்குனர்! title=

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கும் 'கேஜிஎஃப்-2' பல வெற்றிப்படங்களின் சாதனைகளை முறியடித்து வரலாறு படைத்து இருக்கிறது.  இப்படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.  தெலுங்கு  திரையுலகிற்கு 'பாகுபலி' படம் எப்படி பெருமை சேர்த்ததோ, அதேபோல ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான 'கேஜிஎஃப்-2' படம் கன்னட திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது.

மேலும் படிக்க | தளபதி 66-ல் சரத்குமாரின் ரோல் என்ன? இதோ அப்டேட்

இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து பாராட்டியுள்ளார்.  அதில்  அவர் கூறுகையில், "மான்ஸ்டர் வெற்றியான 'கேஜிஎஃப்-2' படத்தை உருவாக்குவதற்கு மட்டுமே செலவழிக்கப்பட்டது, நடிகர்களுக்கு வீணாக அதிக சம்பளம் கொடுத்து பணத்தை வீணாக்காமல் இருந்தால்  சிறந்த தரம் மற்றும் மிகப்பெரிய வெற்றிகள் வந்து சேரும் என்பதற்கு இப்படம் ஒரு தெளிவான சான்று ஆகும். ஹிந்தி திரையுலகத்தை விட்டுவிடுங்கள், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகம் கூட கன்னட திரைப்படங்களை எடுக்கவில்லை, தற்போது பிரசாந்த் நீல் இப்படத்தை உலகத்தரம் வாய்ந்த படமாக உருவாக்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.

 

மேலும் அவர் கூறுகையில், ராக்கி பாய் எப்படி மும்பைக்கு வில்லன்களை அழிக்க மெஷின் கன்களுடன் வருகிறாரோ, அதே போல யாஷ் அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களின் முதல் நாள் வசூலை இயந்திர துப்பாக்கியால் சுடுகிறார், அதுமட்டுமல்லாது இது சாண்டல்வுட்டில் இருந்து பாலிவுட் மீது வீசப்பட்ட அணுகுண்டுக்கு ஈடானது என்றும் கூறியுள்ளார்.  அதனைத்தொடர்ந்து அவர், இது ஒரு கேங்ஸ்டர் படம் மட்டுமல்ல, இது பாலிவுட் துறைக்கு ஒரு திகில் படம் என்றும் கூறியுள்ளார்.

ramgopalvarma

இந்த படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், ஐயப்ப பி. ஷர்மா, ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், அர்ச்சனா ஜோயிஸ், டி.எஸ். நாகாபரணா, சரண், அவினாஷ், லக்கி லக்ஷ்மன், வசிஷ்ட சிம்ஹா, ஹரிஷ் ராய், தினேஷ் மங்களூர், தாரக், ராமச்சந்திர ராஜு, வினய் பிடப்பா, அசோக் சர்மா, மோகன் ஜுனேஜா, கோவிந்த கவுடா, ஜான் கோக்கன் மற்றும் ஸ்ரீனிவாஸ் மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | 'KGF-2' பட எடிட்டர் ஒரு சிறுவனா?! மிரண்டு பார்க்கும் திரையுலகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News