மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் இதுதானா? வெளியான அப்டேட்!

Maamannan First Look: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' ஃபர்ஸ்ட் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதியில் வெளியாகும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2023, 10:07 AM IST
  • 'மாமன்னன்' தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படமாகும்.
  • 'மாமன்னன்' படம் ஜூன் 29ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
  • மே-1ம் தேதியன்று 'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.
மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் இதுதானா? வெளியான அப்டேட்! title=

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் 'மாமன்னன்'.  ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.  மேலும் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், வடிவேலு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  உதயநிதி முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தாலும், தான் முன்னர் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.  தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கிறார், அதன்பின்னர் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கி குறுகிய காலத்தில் பிரபலமான தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உயர்ந்து இருக்கிறார்.  கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' எனும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்றார்.

மேலும் படிக்க | நாளை அஜித்தின் ஏகே 62 அறிவிப்பு? டைட்டில் இது தானா?

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கு 'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  மே-1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாமன்னன் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்  வெளியிடப்படும் என்றும், தற்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் வைகைப் புயல் வடிவேலு ஆகியோர் இடம்பெற்றிருக்கும் புதிய போஸ்டரையும் படத்தின் தயாரிப்பு குழு வெளியிட்டு இருக்கிறது.  "அவர்கள் வருகிறார்கள், தேதியைச் சேமித்து கொள்ளுங்கள், #MAAMANNAN ஃபர்ஸ்ட் லுக். 01.05.2023 " என்கிற கேப்ஷனும் அந்த புகைப்படத்துடன் சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது.  அந்த புகைப்படத்தில் ஒருபக்கம் வடிவேலு அரசியல்வாதி போல வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுகொண்டு நிற்க, அவருக்கு எதிர்முனையில் உதயநிதி ஸ்டாலின் கோட் சூட் மாட்டிக்கொண்டு கெத்தாக நிற்கிறார்.  இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.  'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

இதுவரை வடிவேலுவை நாம் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தான் பார்த்திருக்கிறோம் ஆனால் வைகைப்புயல் வடிவேலு 'மாமன்னன்' படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டார் என்றும் இந்த படத்தில் அவருடைய நடிப்பு விருதுகளை அள்ளிக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உதயநிதி நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் முழு படப்பிடிப்பையும் சில மாதங்களுக்கு முன்னரே படக்குழு முழுமையாக முடிந்துவிட்டது.  தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பணிகளை விரைவில் முடித்துவிட்டு, படத்தை ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  'மாமன்னன்' படம் தான் உதயநிதி ஸ்டாப்களின் நடிக்கும் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும் படிக்க | மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 10 த்ரில்லர் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News