ரகுமான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திற்கு மாமன்னன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 4, 2022, 10:41 AM IST
  • உதயநிதி படத்திற்கு முதன் முதலாக இசையமைக்கும் ரகுமான்.
  • உதயநிதியின் கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • வடிவேலு இந்த படத்தில் நடிக்கிறார்.
ரகுமான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்! title=

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திற்கு மாமன்னன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.  மேலும் இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர்.  இந்த படத்தின் அணிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | நெஞ்சுக்கு நீதி டீசர் ரிலீஸ் - உண்மைச் சம்பவத்தின் பின்னணி?

தற்போது அருண் காமராஜ் இயக்கத்தில் ஆர்டிகள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி என்கிற படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.  அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இரண்டாவது படத்திலேயே தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ்.  இந்த படத்திற்கு பிறகு விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து கபடியை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. பிறகு உதயநிதி ஸ்டாலின் படத்தை முடித்த பிறகுதான் துருவுடன் இணைகிறார்  என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

mari

இந்த போஸ்டரில் கூட்டமாக மாடுகள் நிற்பதுபோல் மற்றும் பறவைகள் பறப்பது போல் இடம் உள்ளது.  மாரி செல்வராஜின் படங்களில் குறியீடுகள் அதிகமாக இருக்கும், அந்த வகையில் இந்தப் படத்திலும் முக்கிய சமூக பிரச்சனையை பேச உள்ளார் என்பது தெரிகிறது. மேலும் போஸ்டரில் முதலில் வடிவேலுவின் பெயரும், பிறகு பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் பெயர் உள்ளது.  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.  மேலும் இதுதான் உதயநிதியின் கடைசி படமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News