தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் தொலைக்காட்சியில் டிவிஆர் (TVR) ரேட்டிங்கில் 9.4 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும். தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும் என திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு கேட்டுள்ளார்.
தனது வரவிருக்கும் "கர்ணன்" (Karnan) திரைப்படத்தின் டீஸர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) வெளியானது. மாலை 7.01 மணிக்கு வெளியான டீசர் இணையத்தில் புயலைக் கிளப்பியது.
"பரியேரம் பெருமாள்" (Pariyerum Perumal) புகழ் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கிய தனுஷின் 41 வது திரைப்படமான "கர்ணன்" உலகளவில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும். படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. சாதாரண மனிதர்களின் உரிமைகளுக்காக போராடும்போது கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்களைச் சுற்றி படத்தின் கதை நகருகிறது எனத்தகவல்.
கர்ணன் படம் திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கர்ணன் படத்தின் முதல் பாடலான "கண்டா வர சொல்லுங்க" (Kandaa Vara Sollunga) பாடல் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.