தோனியுடன் இணையும் நயன்தாரா?

தோனி தயாரிக்கும் தமிழ் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 10, 2022, 04:29 PM IST
  • தோனி தமிழ் திரைப்படம் தயாரிக்கிறார்
  • தோனி தயாரிக்கும் படத்தில் நயன் கதாநாயகி
தோனியுடன் இணையும் நயன்தாரா? title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். அவருக்கென்று தமிழ்நாட்டில் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். தோனியும் தமிழ்நாடு தனக்கு இரண்டாம் தாய் வீடு என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சூழலில் தோனி தமிழ் திரைப்படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார்.

Nayanthara, Vijay, Dhoni

அந்த நிறுவனத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் உதவியாளராக இருந்த சஞ்சய் இணைந்திருக்கிறார். அவர் மூலம் கோலிவுட்டில் தோனி படங்கள் தயாரிக்கவிருக்கிறார் என தெரிகிறது.

மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது 'குற்றப் பரம்பரை' பஞ்சாயத்து... இயக்குநர் யார் தெரியுமா?

இந்நிலையில் தோனி தயாரிக்கும் முதல் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News