OTT Release : இந்த வார ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில் எந்த புது படம் வெளியாகிறது? முழு லிஸ்ட்!

OTT Release List This Week Latest News : வார வாரம் புதுப்படங்கள் ரிலீஸாகி வருவதை ஒட்டி, இந்த வாரமும் ஓடிடியில் பல புது படைப்புகள் வெளியாக உள்ளன.   

Written by - Yuvashree | Last Updated : Mar 20, 2024, 11:45 AM IST
  • ஓடிடியில் வெளியாகும் புது படங்கள்
  • எந்த தளத்தில் எந்த படத்தை பார்க்கலாம்?
  • இதோ, முழு லிஸ்ட்!
OTT Release : இந்த வார ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில் எந்த புது படம் வெளியாகிறது? முழு லிஸ்ட்! title=

OTT Release List This Week Latest News : தியேட்டர்களில் பல புதுப்படங்கள் அடிக்கடி வெளியானாலும், ஓடிடி தளங்களின் வருகையால் அதிலும் பல புதுப்படைப்புகள் ரிலீஸாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த புது படம், எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதை பார்க்கலாமா? 

மறக்குமா நெஞ்சம்:

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர், ரக்ஷன். கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் இவர். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர், அடுத்தடுத்து சில படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ள படம்தான், மறக்குமா நெஞ்சம். இந்த படத்தில் அவர் பள்ளி மாணவனாக நடித்திருக்கிறார். படத்தின் கதையே ஒரு பள்ளியில் நிகழ்வது போலத்தான் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து, தற்போது டெண்ட் கொட்டா தளத்திலும் மார்ச் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓப்பன்ஹைமர்:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரிதும் வெற்றி பெற்ற படம், ஓப்பன்ஹைமர். இந்த படத்தில் சில்லியன் மர்ஃபி ஹீரோவாக நடித்திருக்கிறார். உண்மை சம்பவத்தை வைத்தும், உண்மை கதாப்பாத்திரங்களை வைத்தும் கிறிஸ்டோஃபர் நோலன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் நடைப்பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இப்படம் 7 விருதுகளை பெற்றிருந்தது. இந்த படம், திரையரங்குகளில் வெளியாகி பல மாதங்களுக்கு பிறகு தற்போது ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தை, ஜியோ சினிமா தளத்தில் மார்ச் 22ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

மேலும் படிக்க | CWC 5 : குக் வித் கோமாளி 5 போட்டியாளர்கள் லிஸ்ட்! யார் குக்-யார் கோமாளி? முழு பட்டியல்..

ஆப்ரஹாம் ஆஸ்லர்:

ஜெயராம், மம்மூட்டி அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம், சீரியல் கில்லர் கதையை கொண்டது. தொடர்ந்து ஒரு ஊரில் நடைப்பெற்று வரும் கொலைகளை ஒரு போலீஸார் துப்பு துலக்கி கண்டுபிடிப்பதுதான் படத்தின் திரைக்கதை. இந்த படம், கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து, தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. இந்த மலையாள படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

ஃபைட்டர்:

தீபிகா படுகோன், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தி படம், ஃபைட்டர். இந்த படம், கடந்த ஜனவரி மாதம் வெளியானது. ஆக்‌ஷன்-த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். இப்படத்தை, வரும் 22ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்தியில் காணலாம். 

பிற ஓடிடி வெளியீடுகள்:

மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி, இன்னும் சில படங்கள் மற்றும் தொடர்களும் வெளியாக உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?

>ஒண்டு சரளா பிரேமா கதே-கன்னடம்-அமேசான் ப்ரைம்
>அர்கைல்-ஆங்கிலம்-ஆப்பிள் டிவி
>மிக்ஸ் அப்-தமிழ்-ஆஹா
>ஹாமிசைட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்டரி
>3 பாடி ப்ராப்ளம்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>எவர் மூர்-ஆங்கிலம்-ஹாட்ஸ்டார் சீரீஸ்
>ப்ளெஸ்ட் யூ-இந்தோனேஷின்-நெட்ஃப்ளிக்ஸ்
>ஃப்ரியூட் லாஸ்ட் சீசன்-ஆங்கிலம்-ப்ரைம்
>ஃபிசிக்கல் 100 சீசன் 2- கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ்
>ரோட் ஹவுஸ்-ஆங்கிலம்-ப்ரைம்
>அனாடமி ஆஃப் அ ஃபால்-ஃப்ரெஞ்ச்-ஹாட்ஸ்டார்
>லோடெர்-இந்தி-ஹாட்ஸ்டார் சீரீஸ்
>சுந்தரம் மாஸ்டர்-தெலுங்கு-ஈடிவி வின்
>பூதாடம் பாஸ்கர் நாராயணா-தெலுங்கு-ஆஹா

மேலும் படிக்க | Silk Smitha : சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு காரணம் இதுதான்! பிரபல நடிகை கூறிய பரபரப்பு பேச்சு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News