ரிலீஸுக்கு ரெடியான மாமன்னன்... அதிரடியான அறிவிப்பு இதோ

மாமன்னன் படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. மேலும் மாமன்னன் திரைப்படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 25, 2023, 03:01 PM IST
  • வைகைப்புயல் வடிவேலு கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.
  • மாமன்னன் திரைப்படத்தின் சென்சார் குறித்த அறிக்கை தற்போது வெளியானது.
  • மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்துள்ளனர்.
ரிலீஸுக்கு ரெடியான மாமன்னன்... அதிரடியான அறிவிப்பு இதோ title=

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், வடிவேலு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் பேசு பொருளாக எழுந்தது.  இந்த படத்திலும் ஜாதிய வன்கொடுமைகளை அப்பட்டமாக காட்டி உள்ளார் மாரி செல்வராஜ்.  அதனை தொடர்ந்து கையில் துப்பாக்கியுடன் ஆக்கிரோஷமாக வடிவேலு அமர்ந்து இருக்க, அவருக்கு அருகில் கையில் கத்தியுடன் உதயநிதி ஆக்கிரஷோமாக அமர்ந்து இருக்கும் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

'மாமன்னன்' திரைப்படம் இந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தற்போது அமைச்சர் ஆகி உள்ள உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்று நேர்காணல் ஒன்றில் அறிவித்திருந்தார். இதனால் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த படமும் கைவிடப்பட்டது. 

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா..? செம ஷாக்கில் ரசிகர்கள்..!

இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது திரைப் பயணத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என சொல்லும் அளவிற்கு மிகவும் இயல்பாகவும் ஆக்ரோஷமாகவும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக வைகைப்புயல் வடிவேலு அவர்களின் உடல் மொழியும் பார்வையும் அற்புதமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மாமன்னன் திரைப்படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. மாமன்னன் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…

 

நீண்ட காலமாக தான் பேச நினைத்த ஒரு சமூக நீதி பிரச்சனையை தரமான அரசியல் படமாக திரை வடிவமாக இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னனை உருவாக்கி இருக்கிறார். மாமன்னன் படம் குறித்த முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Kamal Haasan: Project K படத்தில் இணைந்த கமல் ஹாசன்..! இதுதான் அவரது கதாப்பாத்திரமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News