‘மாமன்னன்’ டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியானது அட்டகாசமான அப்டேட்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாமன்னன் திரைப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 15, 2023, 02:19 PM IST
  • மாரி செல்வராஜின் மூன்றாவது திரைப்படம் ‘மாமன்னன்’.
  • இந்த படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகிறது.
  • டிரைலர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘மாமன்னன்’ டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியானது அட்டகாசமான அப்டேட் title=

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் 'மாமன்னன்'. ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், வடிவேலு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர் ஒன்றில் வடிவேலு அரசியல்வாதி போல வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுகொண்டு நிற்க, அவருக்கு எதிர்முனையில் உதயநிதி ஸ்டாலின் கோட் சூட் மாட்டிக்கொண்டு கெத்தாக நிற்பது போன்று இருந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து கையில் துப்பாக்கியுடன் ஆக்கிரோஷமாக வடிவேலு அமர்ந்து இருக்க, அவருக்கு அருகில் கையில் கத்தியுடன் உதயநிதி ஆக்கிரஷோமாக அமர்ந்து இருக்கும் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

வேற லெவல்..வெளியானது மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்..மிரட்டும் வடிவேலு, உதயநிதி

 வடிவேலு பாடியுள்ள மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள்: இந்த தேதியில் வெளியீடு

தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் 'மாமன்னன்' திரைப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.அந்தவகையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் மாமன்னன் பட டிரைலர் வரும் ஜூன் 16ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது இந்த அப்டேட்டினை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | Samantha: ஒரு தொடரில் நடிக்க சமந்தாவிற்கு இத்தனை கோடி சம்பளமா..!

முன்னதாக இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாய் நடைபெற்றது. இதில் உலகநாயகன் கமல் ஹாசன் உட்பட பல திரைபிரபலங்கள் மற்றும் மாமன்னன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அத்துடன் படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் மொத்தம் எட்டு பாடல்கள் அமைந்துள்ளது. இந்த எட்டி பாடல்களையும் பாடலாசிரியர் யுக பாரதி தான் எழுதியுள்ளார். மேலும் அணைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று டிரெண்ட்டிங்கில் உள்ளது.

முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வரும் உதயநிதி தான் முன்னர் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கிறார், அதன்பின்னர் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கி குறுகிய காலத்தில் பிரபலமான தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உயர்ந்து இருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' எனும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதையடுத்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 36 வயதில் அடிக்கும் ஜாக்பாட்..! சமந்தா காட்டில் பணமழை..! பொறாமையில் முன்னணி நடிகைகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News