அடேங்கப்பா..பிரபாஸின் ஸ்டண்ட் கலைஞருக்கு இவ்வளவு சம்பளமா!

Prabhas Stunt Double Salary:தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக விளங்குபவர் பிரபாஸ். இவரது ஸ்டண்ட் கலைஞருக்கு வழங்கப்படும் சம்பள விவரம் குறித்த தகலவ் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 23, 2024, 04:17 PM IST
  • பிரபாஸ் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருகிறார்.
  • இவருக்கு ஆக்‌ஷன் ஸ்டண்ட் கலைஞர் இருக்கிறார்.
  • இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அடேங்கப்பா..பிரபாஸின் ஸ்டண்ட் கலைஞருக்கு இவ்வளவு சம்பளமா! title=

இந்திய நடிகர்களுள் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர், பிரபாஸ். இவர், தொடர்ந்து ஆக்ஷன் த்ரில்லர் படங்களில் நடித்து வருகிறார். இவரது ஸ்டண்ட் டபுள் கலைஞருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரம் தற்பாேது வெளியாகி வருகிறது. 

ரிபள் ஸ்டார் பிரபாஸ்:

ரசிகர்களால், ‘ரிபள் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்த இவர், அதன் பிறகு தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்-அஜித் ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் இவர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

தொடர் தாேல்விகள்:

ராஜ மெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருந்த பாகுபலி, பாகுபலி 2 படங்கள் உலக அளவில் பெரிய ஹிட் அடித்தன. தொடர்ந்து இவரை தேடி வந்த படங்கள் அனைத்தும் ஹை பட்ஜெட் படங்களாகவே இருந்தன. ராதே ஷ்யாம், சஹோ உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படங்கள், பெரும் தோல்வியடைந்தன. இதையடுத்து, ராமாயணத்தை வைத்து எடுக்கப்பட்ட ‘ஆதி புருஷ்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்து தோல்வி பெற்றது. சமீபத்தில் வெளியான வெளியான ‘சலார்’ படம், சுமார் 450 கோடி அளவில் மூன்று பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம், தமிழகத்தை தவிர பிற இடங்களில் ஹிட் அடித்தது. இவர், அடுத்து கல்கி ஏடி 2898 படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | விரைவில் ஹீரோயினாக களமிறங்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி!

பிரபாஸின் ஸ்டண்ட் டபுள்:

ஆக்ஷன் படங்களில் அதிகளவில் சண்டை காட்சிகள் இருக்கும். அது போன்ற காட்சிகளில், ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் போன்ற நடிகர்கள் மட்டுமே ஸ்டண்ட் கலைஞர்கள் இல்லாமல் நடிப்பர். பிறர், தங்களுக்கென்று தனி கலைஞர்களை வைத்திருப்பர். பிரபாஸிற்கும் சலார் மற்றும் கல்கி ஏடி உள்ளிட்ட படங்களில் அப்படி ஒரு கலைஞர் இருக்கிறார். அவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். 

பிரபாஸின் ஸ்டண்ட் டபுள், 30 நாட்கள் வரை அவருடன் ஷூட்டிங்கிள் பங்கு பெற வேண்டுமாம். இதற்காக அவர், மொத்தமாக ரூ.9 முதல் 10 கோடி வரை சம்பளமாக பெருவதாக கூறப்படுகிறது. பிரபாஸை போலவே, அவரது ஸ்டண்ட் டபுளும் அதிக சம்பளம் வாங்குவதாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். 

புதுமையான கதாப்பாத்திரத்தில் பிரபாஸ்:

நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு காமெடி செய்யும் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்ததே இல்லை. ஆனால், கல்கி ஏடி படத்தில் இவருக்கு அது போன்ற கதாப்பாத்திரம்தான் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நார்மல் ஹீரோவாக பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | விஜய்யின் GOAT படத்தில் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News