சீதா ராமன் அப்டேட்: ராமை வெறுப்பேற்றும் சீதா.. ராஜசேகரிடம் சிக்கும் ஆதாரம்

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 2, 2024, 12:14 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • அஞ்சலிக்கு பாம் காட்டும் சீதா.
  • சீதா மீது கோபப்படும் ராம்.
சீதா ராமன் அப்டேட்: ராமை வெறுப்பேற்றும் சீதா.. ராஜசேகரிடம் சிக்கும் ஆதாரம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா ராமை விவாகரத்து செய்ய முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அஞ்சலிக்கு பாம் காட்டும் சீதா

அதாவது, சீதா கோலம் போட்டு கொண்டிருக்க சத்யாவும் அஞ்சலியும் வெளியே வருகின்றனர், சத்யா நானும் உங்களோட சேர்ந்து கோலம் போடவா அண்ணி என கேட்க அஞ்சலி கொலைகாரி என பேச இப்போ இன்னொரு கொலையை செய்ய போறேன் என அஞ்சலி கழுத்தை நெரித்து பயம் காட்டுகிறாள். 

மேலும் படிக்க | பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் 32 வயதில் மரணம்!

சீதா மீது கோபப்படும் ராம்

அதன் பிறகு சீதா ராமின் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு கொண்டிருக்க ராம் வெளியே வந்து நீ எதுக்கு இதையெல்லாம் பண்ணிட்டு இருக்க என கோபப்பட அர்ச்சனா நீ இப்படி எல்லாம் பண்றதால் ராம் உன்னை சும்மா விட்டுடுவானு மட்டும் நினைக்காதே என சொல்கிறாள். 

உடனே சீதா கோர்டில் நிறைய உண்மை வெளியே வரும் அப்போ தெரியும் என பதிலடி கொடுக்க என்ன உண்மை என அர்ச்சனா பதறி போய் கேட்க நான் தான் கொலைகாரின்னு சொல்லுவாங்க, ஆதாரம் அப்படி தானே இருக்கு, என்ன பாஸ் நான் சொல்றது சரி தானே என டீஸ் பண்ணுவது போல பேசுகிறாள். 

பிறகு ராம் அப்பா இவளை இதையெல்லாம் செய்ய வேண்டாம்னு சொல்லி வையுங்க என சொல்லி கிளம்ப ராஜசேகர் சில ரிப்போர்ட்டுகளுடன் சேதுவை சந்தித்து பேச வருகிறார். சீதா ரெண்டு புல்லட் தான் யூஸ் பண்ணா, அதுக்கு அப்புறமும் குண்டு குறைந்திருக்கு. அப்படினா வேற யாரோ துப்பாக்கியை பயன்படுத்தி இருக்காங்க என சொல்கிறாள். 

அதே போல் கைக்கு கிளவுஸ் போட்டு தான் பயன்படுத்தி இருக்காங்க, அதனால் தான் கை ரேகை சீதாவுடையதாக இருக்கு எனவும் சொல்ல அஞ்சலி நீங்க என்ன எங்க அண்ணனை விட பெரிய போலீசா என நக்கலாக பேச ஆவேசப்படும் சேது அஞ்சலியை கை நீட்டி அறைகிறார். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | 2024 தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிடவில்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News