பிரபல சீரியல் நடிகை தற்கொலை; முன்னாள் காதலனா காரணம்?

’மூன்று முடிச்சு’ சீரியல் மூலமாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலமான இந்தி சீரியல் நடிகை வைஷாலி தாக்கர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 18, 2022, 11:47 AM IST
  • மூன்று முடிச்சு சீரியல் நடிகை தற்கொலை
  • முன்னாள் காதலனால் தொல்லை
  • சிக்கிய 5 பக்க கடிதம்
பிரபல சீரியல் நடிகை தற்கொலை; முன்னாள் காதலனா காரணம்? title=

நடிகை வைஷாலி தாக்கர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், தொலைக்காட்சி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைஷாலி தனது 30வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நடிகை தனது முன்னாள் காதலர் ராகுல் நவ்லானியை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2.5 ஆண்டுகளாக வைஷாலிக்கு ராகுல் தொல்லை கொடுத்து வந்தார். நடிகையின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் வைஷாலி வசித்து வந்தார். இவர் கல்லூரி படிப்பை 2014-ல் முடித்த வைஷாலி டிவி சீரியல்களில் நடிப்பதற்காக மும்பை வந்துள்ளார். அதில் இருந்து தொடர்ந்து இவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் மன்மோகினி, சூப்பர் சிஸ்டர்ஸ் விஷ், அமிர்த் உள்பட பல வெற்றி பெற்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

மேலும் படிக்க | பிக்பாஸில் ஜிபி முத்துவுக்கு ஒருநாள் சம்பளம்! அமுதவாணன் - ரக்ஷிதாவுக்கு இவ்வளவா?

இந்த நிலையில் நீண்ட நேரமாக அவரது அறை திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், வைஷாலி இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தேஜாஜி நகர் காவல்துறையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைஷாலிக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அவரது முன்னாள் காதலன் அளித்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தற்கொலை கடிதத்தில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது?
வைஷாலி தனது பக்கத்து வீட்டுக்காரர் ராகுல் மற்றும் அவரது மனைவி திஷா ஆகியோரின் பெயரை தற்கொலைக் குறிப்பில் எழுதியிருந்தார். இருவரது மரணத்துக்கு காரணமானவர்கள் என்று கூறி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கோரினார். வைஷாலி மிதேஷை திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில், தற்கொலைக் குறிப்பில் வைஷாலியும் மிதேஷிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் படிக்க | கேமரா இருக்குனுலாம் பார்க்க மாட்டேன்... பிக்பாஸை மிரட்டியை ஜிபி முத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News