பிக்பாஸில் ஜிபி முத்துவுக்கு ஒருநாள் சம்பளம்! அமுதவாணன் - ரக்ஷிதாவுக்கு இவ்வளவா?

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ஜிபி முத்து மற்றும் அமுதவாணன், ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர் ஆகியோரின் ஒருநாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 18, 2022, 10:16 AM IST
  • பிக்பாஸ் கொடுக்கும் சம்பளம்
  • ஜிபி முத்து ஒருநாள் ஊதியம்
  • அமுதவாணனை விட குறைவு
பிக்பாஸில் ஜிபி முத்துவுக்கு ஒருநாள் சம்பளம்! அமுதவாணன் - ரக்ஷிதாவுக்கு இவ்வளவா? title=

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜிபி முத்து, அமுதவாணன், ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர் மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பிரபலங்களுடன் 20 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர். முதல் வாரத்தை கடந்து 2வது வாரத்தை எட்டியிருக்கிறது பிக்பாஸ். கடந்த சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசன் ஆரம்பம் முதலே அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. விதவிதமான டாஸ்குகள் கொடுத்து போட்டியாளர்களை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ். 

மேலும் படிக்க | கேமரா இருக்குனுலாம் பார்க்க மாட்டேன்... பிக்பாஸை மிரட்டியை ஜிபி முத்து!

டாஸ்குகள் மட்டும் இதுவரை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்றும் விதமாக நாமினேஷனையும் தொடங்கி வைத்திருக்கிறார். ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில்  இருப்பவர்களை கடந்து, போட்டியாளர்களால் இரண்டு பேர் நாமினேஷன் செய்ய பிக்பாஸ் அறிவுறுத்தினார். அதன்படி வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை நாமினேஷன் செய்துள்ளனர். பெரும்பாலானோர் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோரை எலிமினேஷன் செய்யலாம் என கூறியிருக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவர் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார் ஜிபி முத்து. 

அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் சூழலில், ஜிபி முத்துவுக்கு நாள் ஒன்றுக்கு பிக்பாஸில் கொடுக்கப்படும் ஊதியம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜிபி முத்துவுக்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறதாம். ஏற்கனவே பிரபலமாக இருக்கும் அமுதவாணன் 23 ஆயிரம் ரூபாய் முதல் 27 ஆயிரம் ரூபாய், ரக்ஷிதாவுக்கு 25 முதல் 28 ஆயிரம் ரூபாய், ராபர்ட் மாஸ்ட் 25 முதல் 27 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மைனா நந்தினிக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறதாம்.

மேலும் படிக்க | பிக்பாஸ் செல்லும் முன் மைனா நந்தினி பேசிய வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News