பார்வதி அம்மாளின் வறுமைநிலை அறிந்து உதவ முன்வந்த முதல்வருக்கு நன்றி: லாரன்ஸ்

ஜெய்பீம் படத்தின் உண்மைக்கதை நாயகனான ராசாக்கண்ணுவின் குடும்பத்திற்கு வீடுகட்டி தருவதாக முதல்வர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2021, 09:41 AM IST
பார்வதி அம்மாளின் வறுமைநிலை அறிந்து உதவ முன்வந்த முதல்வருக்கு நன்றி: லாரன்ஸ் title=

தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய்பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தான் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜெய் பீம் திரைப்படம் சிறப்பாக இருந்தது. பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்கூறும் படமாக ஜெய்பீம் (Jai Bhim) இருந்தது.

ALSO READ | ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது! 

இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு நடக்கும் அவலங்களையே நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் உண்மையில் ராசாக்கண்ணுவிற்கு நடந்த அநீதிகளைப் பார்த்த பார்வதி (Parvathy) அம்மாளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது. அதன்படி இந்த படத்தின் மூலம் பார்வதி அம்மாளின் கதை பலருக்கு தெரிய வந்துள்ளது.

அதன்படி சில நாட்களுக்கு முன்பு நிஜ வாழ்க்கை ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) உறுதியளித்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது ஜெய்பீம் படத்தின் உண்மைக்கதை நாயகனான ராசாக்கண்ணுவின் குடும்பத்திற்கு வீடுகட்டி தருவதாக முதல்வர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.,

ஜெய்பீம் படத்தின் உண்மைக்கதை நாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமைநிலையில் வாழ்ந்து வருவதை ‘வலைப்பேச்சு’ மூலம் அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன். பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழநத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படியும் கேட்டுக்கொண்டனர். அதன்படி சில நாட்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்த நிலையில்,பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்திமூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். பார்வதி அம்மாவின் இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன், மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சம் வழங்க முடிவு செய்துள்ளேன். பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் த.செ. ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

ALSO READ | உண்மையை திரையில் பேச திராணி வேண்டும் கொதிக்கும் மோகன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News