உண்மையை திரையில் பேச திராணி வேண்டும் கொதிக்கும் மோகன்!

இந்தப்படத்தில் எஸ்.ஐ. குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நடித்த இயக்குனர் தமிழின் தத்ரூபமான நடிப்பை பலரும் பாராட்டி வரும் வேளையில், அந்த கதாபாத்திரம் குறித்து திரௌபதி பட இயக்குனர் மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Last Updated : Nov 5, 2021, 09:50 PM IST

Trending Photos

உண்மையை திரையில் பேச திராணி வேண்டும் கொதிக்கும் மோகன்! title=

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வெளியாகி அனைத்து தரப்பினரும் பாராட்டும் "ஜெய்பீம்" படம் குறித்து சிலர் எதிர்மறையான கருத்துக்களை முன் வைத்துள்ளனர். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், அவர்களுக்கு நடந்த அநீதி குறித்தும் பேசும் படமாக "ஜெய்பீம்" அமைந்துள்ளது. இந்த படத்தை பார்க்த்த பலருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி எல்லாம் நடக்குமா.. சாதி எவ்வளவு கொடூரமானது போன்ற கேள்விகள் எல்லாம் எழாமல் இல்லை. 

இன்னும் "ஜெய்பீம்" படம் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். நடிகர் சூர்யா நடிப்பில் ‘ஜெய்பீம்’ அமேசான் பிரைமில் வெளியானது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா (Actor Suriya) இப்படத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மை கதையில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் எஸ்.ஐ. குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நடித்த இயக்குனர் தமிழின் தத்ரூபமான நடிப்பை பலரும் பாராட்டி வரும் வேளையில், அந்த கதாபாத்திரம் குறித்து திரௌபதி பட இயக்குனர் மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன் கூறியது, "பாதிக்கப்பட்ட ராஜாக்கன்னு என்ற குரவர் சமூகத்தை சார்ந்த மனிதருக்காக களத்தில் போராடி திருமணம் கூட செய்யாமல் உடன் நின்றவர் வன்னியர் இனத்தை சேர்ந்தவர். மேலும் உடன் நின்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஐயா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால், திரைப்படத்தில் கொலை செய்த அந்தோனிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி வன்னியர் சமூக அடையாளம் கொண்டு காட்டியதில் உள்ளது உள்நோக்க அரசியல்..

ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்கள் அதை பின்பற்றவும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவுக்கு பலர் பதில் அளித்துள்ளனர். ஆனால் சில பதிவுக்கு இயக்குனர் மோகன் பதில் அளித்துள்ளார். அதில், "சார் நான் 15 வருசமா Cpim கட்சியில இருக்கேன் நீங்க சொன்ன பிறகுதான் தோழர் பாலகிருஷ்ணன் சாதி எனக்கு தெரியும், உங்க சாதிய அரசியலுக்காக கம்யூனிச தோழர்களை சாதிய வட்டத்திற்குள் அடைக்க முயலாதீர்கள். மற்றபடி உள்நோக்கத்தோடு உண்மையை யார் திரித்து கூறினாலும் அது தவறுதான். நீங்கள் உட்பட என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த மோகன், அவர் சாதியை சொல்வது என் நோக்கம் இல்ல சகோ.. உண்மையை சொல்றேன்னு இப்படி வன்மத்தை கொட்டி வச்சதால இதை பேச வேண்டிய நிர்பந்தம்.. அந்தோனிசாமி ஏன் குருமூர்த்தியாக குறிப்பிட்ட சமூகத்தவராக காட்ட வேண்டும்.. பதில் இருக்கா… உண்மையை திரையில் பேச திராணி வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் மோகன் "ஜெய்பீம்" படம் குறித்து கேள்வி எழுப்பவர்களின் ட்வீட்-க்களை பகிர்ந்தும் வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News