ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது!

ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மாற்றப்பட்டுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 6, 2021, 02:02 PM IST
ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது!

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய்பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியானது.  இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தான் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜெய் பீம் திரைப்படம் சிறப்பாக இருந்தது.  பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்கூறும் படமாக ஜெய்பீம் இருந்தது. 

ALSO READ பளிங்கு சிலை டூ பழங்குடியின பெண்! ஜெய் பீம்-ல் கலக்கிய லிஜிமோல்!

தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் இப்படத்தை பார்த்து பாராட்டியும் இருந்தார்.  படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.  பல உண்மை சம்பவங்கள் கதையில் மாற்றப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது.  அதில்1990களில் நடைபெற்ற ஒரு லாக் அப் டெத் குறித்த கதை கருவாக பயன்படுத்தப்பட்டிருந்தது.  உண்மை சம்பவத்தில் காவல் அதிகாரியாக இருந்தவர் ஒரு கிறிஸ்தவ தலித்.

jai

ஆனால் ஜெய் பீம் படத்தில் காவல்துறை அதிகாரியின் வீட்டில் அக்னி குண்ட கேலண்டர் மாட்டப்பட்டு அவர் ஒரு வன்னியர் போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்குவன்னியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. இந்த நிலையில் அக்னி குண்ட கேலண்டர் மாற்றப்பட்டு லட்சுமி படம் பொருந்திய கேலண்டர் காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதனை இயக்குநர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

ALSO READ உண்மையை திரையில் பேச திராணி வேண்டும் கொதிக்கும் மோகன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News