முடிவுக்கு வரும் ராஜா ராணி சீரியல்..இன்னும் 13 நாட்களில் கிளைமாக்ஸ்

ராஜா ராணி சீரியல் இந்த மாதத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதன் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 12, 2023, 08:42 AM IST
  • ராஜா ராணி 2 கிளைமாக்ஸ்.
  • கொலை வழக்கை சந்தியா விசாரித்து வருகிறார்.
முடிவுக்கு வரும் ராஜா ராணி சீரியல்..இன்னும் 13 நாட்களில் கிளைமாக்ஸ் title=

சின்னத்திரை தொடர்கள் அனைவரின் வீட்டிலும் ஆட்சி செய்து வருகிறது, மக்களின் கவனங்களை ஈர்க்க பல சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு ஒவ்வொரு சீரியலாக களமிறக்கி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் முடிவடைய போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மாத இருத்திக்குள் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி காட்டப்படும். மேலும் இதன் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ராஜா ராணி 2
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் ஒரு ஹிந்தி சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலின் கதாநாயகி அடிக்கடி மாறிக்கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா நடிப்பில் தொடங்கிய இந்த சீரியலில் இருந்து பல நடிகர்கள் மாற்றப்பட்டுவிட்டனர். தற்போது இந்த சீரியல் ஹீரோயாக நடிகை ஆஷா கௌடா நடித்து வருகிறார். மேலும் முதல் பாகம் போல் இதில் சரியான டிஆர்பி இல்லாததால் விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்று முன்னதாக கூறப்பட்டு வந்தது. 

மேலும் படிக்க | லியோவில் இணைந்த விக்ரம் படத்தின் நடிகை! அப்போ LCU கன்பார்ம்தானா?

ராஜா ராணி 2 கிளைமாக்ஸ்
அந்தவகையில் தற்போது கிளைமாக்ஸ் காட்சியை நோக்கி சென்றிருக்கும் இந்த சீரியலில், சிவகாமி கொலை செய்த விக்கியின் கொலை வழக்கை சந்தியா விசாரித்து வருகிறார். ஆனால் சிவகாமியின் மொத்த குடும்பமும் இந்த கொலையை மறைப்பதற்காக நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. இறுதியாக சந்தியா சிவகாமி தான் கொலை செய்தார் என்றதை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்கப் போகிறார் என்றும் சிவகாமி ஜெயிலுக்கு போவது போன்று இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்றும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் சரியான டிஆர்பி இல்லாத விரைவில் ராஜா ராணி 2 சீரியல் முடியப்போகிறது என்றும் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி இதன் கிளைமாக்ஸ் எபிசோடு ஒளிபரப்பாகும் என்று தகவல் வந்திருக்கிறது.

மேலும் படிக்க | புத்தாண்டில் ராகவா லாரன்சின் திரைப்படம் ருத்ரன் வெளியாகாது! மெட்ராஸ் HC தடை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News