சின்னத்திரை தொடர்கள் அனைவரின் வீட்டிலும் ஆட்சி செய்து வருகிறது, மக்களின் கவனங்களை ஈர்க்க பல சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு ஒவ்வொரு சீரியலாக களமிறக்கி வருகின்றது. திரை பிரபலங்களை விடவும் சீரியலில் நடிக்கும் பிரபலங்களை தான் பலருக்கும் நன்கு தெரிகிறது. தற்போது விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் அர்ச்சனா. ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் இன்ஸ்டா மூலம் பிரபலமாகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவரது வில்லித்தனத்தை கண்டு பல இல்லத்தரசிகள் வசைபாடி வருகின்றனர்.
மேலும் படிக்க | ஊடகங்களே என் தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள் - மீனா வேண்டுகோள்
வழக்கம்போல எல்லா நடிகர், நடிகைகளை பற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் எழுந்து வரும் நிலையில் இதில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? இவரை பற்றி சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது. அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடிப்பவரை அர்ச்சனா காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளியானது. மேலும் ஒரு விருது வழங்கும் விழாவில் அர்ச்சனாவை மேடையில் வைத்து ஈரோடு மகேஷ், பாரதி பெயரை சொல்லாமல் சொல்லி கிண்டல் செய்வார், அதற்கு பாரதியும் வெக்கபடும்படியான சில வீடியோக்கள் வெளியாகி பலருக்கும் சந்தேகத்தை வெகுவாக கிளப்பியது.
அதனை தொடர்ந்து பாரதி, அர்ச்சனா இருவரும் ஒரே கலரில் உடையணிந்து கொண்டு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அடுத்ததாக பாரதி அர்ச்சனா தங்கையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது எடுத்த சில வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை குழப்பமடைய செய்தது. இவர்களை பற்றி இவ்வளவு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த இருவரும் இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவேயில்லை. இவர்கள் இருவரும் காதல் உறவில் உள்ளார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அர்ச்சனா மற்றும் பாரதிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் சில வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு திடீர் ஆபரேஷன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR