4 மெகா ஹிட் சீரியலை நிறுத்தப் போகும் விஜய் டிவி..காரணம் இதுதானா?

தொடர்ந்து நான்கு சீரியல்களை விஜய் டிவி நிறுவனம் நிறுத்த இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 4, 2023, 12:52 PM IST
  • விஜய் டிவியில் அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்கள் குவித்து வருகின்றன.
  • வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது.
4 மெகா ஹிட் சீரியலை நிறுத்தப் போகும் விஜய் டிவி..காரணம் இதுதானா? title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும், அனைத்து சீரியல்களுக்கும் மக்களிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. இருப்பினும் டி.ஆர்.பி ரேட்டிங்கை பிடிப்பதற்காக சன், ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகளும் அவ்வப்போது புது புது சீரியல்களை வெளியிட்டு வருகின்றது. 

இந்நிலையில் விஜய் டிவியில் அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்கள் குவித்து வருகின்றன. இதில் குறிப்பாக பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே சீசன் 2, பாண்டியன் ஸ்டோரேஸ் போன்ற தொடர்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளன. வித்தியாசம் வித்தியாசமான நிகழ்ச்சிகளை காண்பதில் ரசிகர்களின் ஆர்வம் இந்த சேனல்களை மேலும் சிறப்பான நிகழ்ச்சிகளை கொடுக்க வைக்கின்றன. மேலும் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. இதனால் டிஆர்பியும் அதிகரிக்கிறது. அத்துடன் ரசிகர்களின் பேவரட் சேனலாக விஜய் டிவி விளங்கி வருகிறது.

மேலும் படிக்க | விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்! இந்த விசயத்திலுமா?

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 4 மெகா ஹிட் சீரியல்கள் நிறுத்தப்பட இருக்கும் தகவல் வெளியாகி, இணையதளத்தில் வைரலாகி வருவதோடு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் வருகிற ஜூன் மாதத்திற்குள் நான்கு தொடர்களை நிறுத்த இருக்கிறது என்று கூறப்படுறது. 

நிறுத்தப்பட இருக்கும் சீரியல்களின் பட்டியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழும் சரஸ்வதியும்
ராஜா ராணி 2
காற்றுக்கென்ன வேலி

* பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலின் கடைசி அப்டேட்டின் படி, அண்ணன், தம்பிகள் தற்போது இந்த சீரியலில் பிரிந்து இருக்கின்றனர். சிறிது நாள் கழித்து அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து ஒன்று சேர்ந்து இந்த சீரியல் முடியப்படும் என்று கூறப்படுகிறது. 

* தமிழும் சரஸ்வதியும் தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. கடைசி அப்டேட்டின் படி தமிழ் தான் செய்யாத தவறுக்காக தன்னை வீட்டில் அனைவரும் சந்திக்கப்பட்டு திட்டியதால் தன்னுடைய மனைவியை கூட்டிக்கொண்டு வெளியே வந்திருக்கிறார். தமிழ் தற்போது சந்தித்து தன்னுடைய போராட்டத்தில் வெற்றி பெற்று, வீட்டில் உள்ளவர்கள் இவரிடம் மன்னிப்பு கேட்ட போது இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

* இது ஒரு ஹிந்தி சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலின் கதாநாயகி அடிக்கடி மாறிக்கொண்டிருந்தனர். மேலும் முதல் பாகம் போல் இதில் சரியான டிஆர்பி இல்லாததால் விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

* காற்றுக்கென்ன வேலி சீரியலும் 600 எபிசோடுகள் தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது! வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News