NRI News: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் TDS கழிக்கப்படும், விதிமுறைகள் இதோ

NRI Tax Deduction: ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) என்ற தகுதியை பெற்ற பிறகு, இந்தியாவில் இருந்து வருமானம் ஈட்டினால் மட்டுமே TDS கழிக்கப்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 22, 2022, 04:02 PM IST
  • வெளிநாட்டில் வருமானம் ஈட்டி அங்கே வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-கள்) வரி செலுத்த வேண்டியதில்லை.
  • வரி விலக்குக்கு தகுதியுடையவர்கள் யார்?
  • வரி விலக்குக்கு ஏதேனும் வரம்பு உள்ளதா?
NRI News: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் TDS கழிக்கப்படும், விதிமுறைகள் இதோ  title=

வெளிநாட்டில் வருமானம் ஈட்டி அங்கே வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-கள்) வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் போதும் இந்தியாவில் இருந்து வருமானம் ஈட்டினால், அவர்கள் வரிவகைக்குள் வரலாம், அல்லது இந்தியாவில் உள்ள மூலத்தில் டிடிஎஸ் கழிக்கப்படலாம். இருப்பினும், இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) ஆன பிறகு, அவர் இந்தியாவில் இருந்து வருமானம் ஈட்டினால் மட்டுமே டிடிஎஸ் கழிக்கப்படும்.

ஒரு நிதியாண்டில், இந்திய வரிச் சட்டங்களின் படி, நீண்ட காலமாக இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் என்ஆர்ஐகளும், வீட்டுச் சொத்து, நிலையான வைப்புத்தொகை மற்றும் பங்குகள் போன்ற சொத்துக்களை வைத்திருக்க முடியும். மேலும் இந்தியாவில் செயலில் உள்ள வங்கிக் கணக்குகளையும் வைத்திருக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் என்ஆர்ஐ வரியின் கீழ் வந்தால், இந்தியாவில் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 195ன் கீழ் இந்த சொத்துக்களுக்கு என்ஆர்ஐ-க்கு தொகை செலுத்தும் நபர் அல்லது நிறுவனம் டிடிஎஸ் கழிக்க வேண்டும். 

வரி விலக்குக்கு தகுதியுடையவர்கள் யார்? அவர்களின் பொறுப்பு என்ன?

ஒரு என்ஆர்ஐ-க்கு வழங்கப்படும் சம்பளத்தைத் தவிர, வட்டி அல்லது வேறு ஏதேனும் தொகை மூலம் பணம் செலுத்தும் நபர் அல்லது நிறுவனம், சட்டத்தின் பிரிவு 195 இன் கீழ் மூலத்தில் வரியைக் கழிக்க வேண்டும். வரியானது நிகர வரிக்குட்பட்ட வருமானமாக இருக்கும் கொடுப்பனவுகளிலிருந்து மட்டும் கழிக்கப்பட வேண்டும். மேலும் கட்டணத்தின் ஒரு பகுதி மட்டுமே வரிக்கு பொறுப்பாக இருக்கும் கட்டணங்களிலிருந்தும் வரி கழிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்கள் அனைத்தும் ஆண்டு இறுதிக்குள் பரிசீலிக்கப்படும்: கனடா 

எடுத்துக்காட்டாக, என்ஆர்ஓ சேமிப்புக் கணக்கிலிருந்து என்ஆர்ஐ-க்கு வங்கி செலுத்தும் வட்டிக்கு 80டிடிஏ பிரிவின்படி ரூ.10,000 வரை விலக்கு அளிக்கப்படும். இருப்பினும், வட்டி செலுத்தும் போது, ​​வங்கியாளர் என்ஆர்ஐக்கு செலுத்தும் வரியைக் கழிப்பார். எனவே, ஒரு நிதியாண்டில் என்ஆர்ஓ சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் மொத்த வட்டி ரூ. 18,000 என்றால், கூடுதல் வருமானமான ரூ.8,000-க்கு பதிலாக ரூ.18,000 -இல் இருந்து டிடிஎஸ் கழிக்கப்படும்.

வரி விலக்குக்கு ஏதேனும் வரம்பு உள்ளதா?

என்.ஆர்.ஐ.க்க-ளுக்குச் செலுத்தப்படும் வரிக் கழிப்பிற்கு வரம்பு இல்லை. இதனால், NRI பெற்ற வருமானத்தில் 1 ரூபாய் கூட டிடிஎஸ் வரம்பிற்குள் வரும். மேலும், வருமான வரிச் சட்டம், பணம் பெறுபவரின் (என்ஆர்ஐ) கணக்கில் அல்லது பணம் செலுத்தும் நேரத்தில் அல்லது காசோலை அல்லது வரைவோலை அல்லது வேறு ஏதேனும் முறைகளில், எது முந்தையதோ, அந்த வருமானத்தை செலுத்துபவரின் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டம் கூறுகிறது. 

எந்த விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும்

- வங்கிகள், என்பிஎஃப்சி-கள் அல்லது வேறு ஏதேனும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட வட்டி மற்றும் டிவிடெண்ட் கொடுப்பனவுகளுக்கு 20% டிடிஎஸ் கழிக்கப்படும். 

- இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள ஈக்விட்டி பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் 10 சதவீதமாக இருக்கும்.

 - டெப்ட் ஃபண்ட், ஹைப்ரிட் ஃபண்ட், போன்ற பிற நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 20 சதவீதம் டிடிஎஸ் விதிக்கப்படுகிறது.

- இந்தியாவில் ஈக்விட்டி பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் மூலதன ஆதாயங்களுக்கு 15 சதவீத டிடிஎஸ் பொருந்தும்.

- இந்தியாவில் அமைந்துள்ள வீட்டுச் சொத்திலிருந்து வாடகை வருமானம் போன்ற பிற வருமானங்களுக்கு 30 சதவீத டிடிஎஸ் பொருந்தும்.

மேலும் படிக்க | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது RBI: இனி அங்கிருந்தே இதை செய்யலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News