TDS Claiming Process: TDS பணத்தை திரும்ப பெறும் முறை

TDS Claiming Process: ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து நிறுவனம் தனது விதிகளின்படி சம்பளத்தில் இருந்து TDS தொகையை கழிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 21, 2022, 07:02 PM IST
  • TDS என்பது நேரடி வரிவிதிப்பு முறையாகும்,
  • இது வருமான மூலத்திலிருந்து (சம்பளம் போன்ற வருமான ஆதாரம்) கழிக்கப்படுகிறது.
  • ஆண்டு வரி கணக்கிடப்பட்டு, சராசரி விகிதத்தில் இருந்து TDS கழிக்கப்படுகிறது.
TDS Claiming Process: TDS பணத்தை திரும்ப பெறும் முறை title=

டிடிஎஸ் என்பது நேரடி வரிவிதிப்பு முறையாகும், இது வருமான மூலத்திலிருந்து (சம்பளம் போன்ற வருமான ஆதாரம்) கழிக்கப்படுகிறது. டிடிஎஸ் என்பதன் முழு வடிவம், மூலத்தில் கழிக்கப்படும் வரி அதாவது மூலத்தில் கழிக்கப்பட்ட வரி.  சம்பளம் மூலம் ஆண்டு வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் பணியாளர் செலுத்த வேண்டிய  ஆண்டு வரி கணக்கிடப்பட்டு, சராசரி விகிதத்தில் இருந்து TDS கழிக்கப்படுகிறது.

எனினும் பல சமயங்களில் வருமான வரி செலுத்த வேண்டிய தேவைப்படாத  வகையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் சம்பளத்தில் இருந்து டிடிஎஸ் கழிக்கப்படுகிறது. ஏனெனில், பணியில் அமர்த்தியுள்ள நிறுவன அல்லது முதலாளி தனது ஊழியர்களின் TDS-ஐ குறிப்பிட்ட தேதிக்குள் கழிக்க வேண்டும் என்ற நிலையில்,  சரியான நேரத்தில் நிறுவனத்தில், சம்பளம் பெறும் ஊழியர் வரி விலக்கு பெறும் வகையிலான முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், நிறுவனம் அதன் விதிகளின்படி சரியான நேரத்தில் வரியைக் கழிக்கிறது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து TDS பிடித்தம் செய்யப்படுகிறது.

TDS அதிகமாக கழிக்கப்பட்டால் என்ன செய்வது

அதிக TDS கழிக்கப்பட்டால், உங்கள் பணத்தை திரும்ப பெற முடியாது என்பது அல்ல. வருமான வரியை தாக்கல் செய்வதன் மூலம் உங்கள் சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்ட வரியை திரும்பப் பெறலாம். 2021-2022 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய, வரித் துறையின் போர்டல் திறக்கப்பட்டுள்ளது. ஜூலை 31, 2022 க்கு முன் வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதன் மூலம், நீங்கள் கூடுதலாக செலுத்திய வரி சரியான நேரத்தில் திரும்ப கிடைக்கும்.

மேலும் படிக்க | Income Tax Vs TDS: வருமான வரிக்கும், TDS-க்கும் உள்ள சில வித்தியாசங்கள்

கிளைம் செய்யும் முறை

TDS என்னும் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி பணத்தைத் திரும்பப் பெற, ஜூலை 31, 2022க்கு முன் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். 

ITR தாக்கல் செய்யும் போது கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட விஷயத்தைக் குறிப்பிடவும். இதற்குப் பிறகு கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட TDS உங்கள் கணக்கில் வரும்.

இது தவிர, கூடுதலாக கழிக்கப்பட்ட TDS தொகையை திரும்ப பெற, 15G படிவத்தை பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்கலாம். இதற்குப் பிறகும், உங்கள் TDS பணம் திரும்ப கிடைக்கும். விரைவில் பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், விரைவில் ஐடிஆர் தாக்கல் செய்யுங்கள்.

பேமெண்ட் ஸ்டேடஸை அறிய www.incometax.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்யலாம்.

பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

இதற்குப் பிறகு நீங்கள் இ-ஃபைலிங் ஆப்ஷனைக் காண்பீர்கள்.

View File Returns என்பதைக் கிளிக் செய்யவும்.

இதற்குப் பிறகு ஐடிஆர் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

தகவல் தொழில்நுட்பத் துறையும் வரி செலுத்துவோரின் புகார்களுக்கு தீர்வு காண ஏற்பாடு செய்துள்ளது
வரி தொடர்பான எந்தவொரு புகாரையும் தீர்க்க வருமான வரித் துறை 'e-Nivaran' போர்ட்டலையும் உருவாக்கியுள்ளது. இந்த போர்ட்டலில் நீங்கள் எந்த புகாரையும் பதிவு செய்யலாம். புகார் விரைவில் தீர்க்கப்படும்.

மேலும் படிக்க | ஆன்லைனில் PF கணக்கின் இருப்பை சரிபார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News